பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1631 

லாகிய பொறி ஒன்று கழலுதலாலே; நம்பன் எல்லாப் பொறிகளும் சோர்ந்து - யசோதரன் தன்னுடைய ஐம்பொறிகளும் புலன்களிலே செல்லும் வேட்கை போக; இல் பொறி இன்பம் நீக்கி - இல்லின்கண் நல்வினையால் நுகரும் இன்பத்தையும் நீக்கி; இராயிரர் சூழச் சென்றான் - இரண்டாயிரம் அரசர்கள் சூழ்ந்து வரத் துறவிலே சென்றான்.

   (வி - ம்.) சோர்ந்து. சோர: எச்சத்திரிபு.

   பொறி - இயந்திரம். பொற்பொறி - அழகிய பொறி. எல்லாப் பொறிகளும் சோர்ந்து என்றது மெய், வாய், கண், மூக்கு, செவீ என்னும் ஐம்பொறிகளும் சோர்ந்து என்றவாறு. இல் - இல்லம். பொறி - ஊழ்.

( 288 )
2887 தணக்கிறப் பறித்த போதுந்
  தானளை விடுத்தல் செல்லா
நிணப்புடை யுடும்ப னாரை
  யாதினா னீக்க லாகு
மணப்புடை மாலை மார்ப
  னொருசொலே யேது வாகக்
கணைக்கவி னழித்த கண்ணார்த்
  துறந்துபோய்க் கடவு ளானான்.

   (இ - ள்.) தணக்கு இறப் பறித்தபோதும் தான் அளைவிடுத்தல் செல்லா - வாலை இறப்பற்றிப் பறித்த காலத்தும் தான் அளையைக் கைவிடாத; நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும் - நிணத்தைப் படயிலே உடைய உடும்புபோன்ற வரை யாதொரு வழியாலும் இல்வாழ்க்கையினின்றும் போக்கவியலாது; மணம்புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆக மணத்தைக் கூடுதலையுடைய மாலையணிந்த மார்பனாகிய யசோதரன் (முற்பிறப்பின் பயனால்) தந்தை கூறிய ஒரு சொல்லே காரணமாகக் கருதி; கணைக்கவின் அழித்த கண்ணார்த் துறந்து போய் - அம்பின் அழகை அழித்த கண்களையுடைய மகளிரைத் துறந்து சென்று; கடவுள் ஆனான் - முனிவன் ஆனான்.

   (வி - ம்.) தணக்கு - வால். நிணத்தைப் புடையிலேயுடைய உடும்பென்க. மணத்தைக் கூடுதலையுடைய மாலை என்க. இனி. மணப்பு - மணத்தல் எனினும் இழுக்கின்று.

( 289 )
2888 தூமமார்ந் தணங்கு நாறுஞ் சுரும்புசூழ் தாரி னானுந்
தாமமா ரொலிய லைம்பாற் சயமதித் திருவு மார்ந்த
காமமா சுண்ட காதற் கதிர்வளைத் தோளி னாரு
நாமநாற் கதியு மஞ்சி நற்றவத் துச்சி கொண்டார்.