பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1634 

   ஆசிரியன் முழுவதூஉந் திரித்துக் கொண்ட வினைத்திரி சொற்கள், பரியாயச் சொற்களாம். இது, பசுவை முலையைக் கட்டினான், பாம்பை வாயைக் கட்டினான் என்றாற்போலப் புடைபெயர்ச்சித் தொழில் புலப்படாமலும் நிற்கும்; இவ்விரண்டு சொல்லும் வேறு வேறு பொருள் தருதலின், ஒன்றற்கொன்று பரியாயம் ஆகாமையின் சாரணர் கூறிய சிறையென்னுஞ் சொல்லிடத்துக் கட்டென்னுஞ் சொல் பிறத்தலின்மையின், முன்னர்க் கட்டென்று கூறியது ஈண்டைக்குப் பொருந்தாதாயிற்று. ஈண்டு இவர்கூறிய பாவம் காரணமும், ஆண்டுச் சிறைப்பட்டது காரியமுமாகவே கோடல் வேண்டுதலின், சிறைப்பட்டானென்றே யாண்டும் பொருள் கூறவதன்றிக் கட்டுண்டான் என்று பொருள் கூறலாகாமை உணர்க.

( 292 )

வேறு

2891 மஞ்சிவர் மணிவரை யனைய மாதவன்
வஞ்சமி லறவுரை பொதிந்த வாய்மொழி
யஞ்சின னிருந்துழி யம்பு வீழ்ந்தென
நஞ்சுமிழ் வேலினா னடுங்க வீழ்ந்ததே.

   (இ - ள்.) மஞ்சு இவர் மணிவரை அனைய மாதவன் - முகில் ஊரும் கரிய மலைபோல அசைவற்ற மாதவன்; வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய்மொழி - மாறுபாடு இல்லாத அறவுரை நிறைந்த வாய்மொழியானது; நஞ்சு உமிழ வேலினான் - நஞ்சு பொழியும் வேலையுடைய சீவகன்; அஞ்சினன் இருந்துழி - முன்னர் அரசாட்சியை அஞ்சியிருந்தபோது; அம்பு வீழ்ந்தென நடுங்க வீழ்ந்தது - அம்பு வீழ்ந்தாற்போல அவன் நடுங்கும்படி (அவன் காதிலே) வீழ்ந்தது.

   (வி - ம்.) அரசாட்சியை அஞ்சியிருந்த சீவகன் காதிலே மாதவனுடைய வஞ்சமில் அறவுரை பொதிந்த வாய்மொழி நடுங்க வீழ்ந்தது என்க. அம்மொழி, தீவினையாற் சிறைப்பட்டதன்மை கூறியதனை. அஃது அம்பு வீழ்ந்த இடத்தினின்றும் போதற்குப் பிறர் நடுங்குமாறு போல, அரசாட்சியைக் கைவிட்டுப் போதற்கு நடுங்கும்படி வீழ்ந்ததென்க. பயன்தருதலின் மஞ்சு கூறினார். ‘உமிழ் நஞ்சு பொதிந்த வாய்மொழி‘ என்று மொழிமாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

( 293 )
2892 வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக்
காரணி மயிலனார் சூழக் காவல
னேரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினான்
சீரணி மாதவர் செழும்பொற் பாதமே.

   (இ - ள்.) வார் அணி மணித்துடி மருட்டும் நுண் இடை - வார் அணிந்த, மணிபுனைந்த துடியை மயக்கும் நுண்ணிடையை உடைய; கார் அணி மயில் அனார் சூழ - கார்காலத்தில் அணி செயும் மயில்போன்றவர் சூழ (வணங்கி நிற்ப); சீர் அணி