|  முத்தி இலம்பகம் | 
 1639  | 
 | 
  | 
|  2900 | 
கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னா |   |  
|   | 
னடிபணிந் தருளு வாழி யரசரு ளரச வென்னப் |   |  
|   | 
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க |   |  
|   | 
விடியுமிழ் முரச நாண வின்னண மியம்பி னானே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கொடி அணி அலங்கல் மார்பின் குங்குமக் குன்றம் அன்னான் - ஒழுங்குற அணிந்த மாலையையுடைய மார்பனாகிய குங்குமக் குன்றம் போன்ற சீவகனின்; அடி பணிந்து - அடியை வணங்கி; அரசருள் அரச! வாழி அருள் என்ன - அரசர்க்கரசே! வாழ்க! நினைத்ததை அருள்க என்ன; படுசின வெகுளி நாகப் பைந்தலை பனித்து மாழ்க உமிழ் இடிமுரசம் நாண - உண்டாகும் மிகு சீற்றத்தையுடைய நாகத்தின் படமுடைய தலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப் பிறப்பிக்கும் முரசம் நாணுமாறு; இன்னணம் இயம்பினான் - இவ்வாறு கூறினான். 
 | 
| 
    (வி - ம்.) ‘கொடி அணி மார்பு‘ என இயைத்து, வெற்றிக் கொடி எடுத்தற்குக் காரணமான மார்பு எனலுமாம். அருளு : உ : சாரியை. வாழி : அசை எனலுமாம். 
 | 
 ( 302 ) | 
|  2901 | 
ஊனுடைக் கோட்டு நாகான் |   |  
|   | 
  சுரிமுக வேற்றை யூர்ந்து |   |  
|   | 
தேனுடைக் குவளைச் செங்கேழ் |   |  
|   | 
  நாகிளந் தேரை புல்லிக் |   |  
|   | 
கானுடைக் கழனிச் செந்நெற் |   |  
|   | 
  கதிரணைத் துஞ்சு நாடு |   |  
|   | 
வேன்மிடை தானைத் தாயம் |   |  
|   | 
  வீற்றிருந் தாண்மோ வென்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஊனுடைக் கோட்டுச் சுரிமுக நாகு - ஊனையுடைய கோட்டினையும் சுரிந்த முகத்தினையும் உடைய நத்தை; ஆன் ஏற்றைச் செங்கேழ் நாகு ஊர்ந்து - (வரம்பிலே துயின்ற) ஆவின் ஏற்றையும் சிவந்த நிறம் பொருந்திய நாகினையும் ஏறி; இளந்தேரை புல்லி - இளந்தேரையையும் தழுவி; தேனுடைக் குவளைக் கழனி - தேன் பொருந்திய குவளைக் கழனியிலே; கானுடைச் செந்நெற் கதிர் அணைத் துஞ்சும் நாடு - காட்டின் தன்மையை உடைய செந்நெற் கதிராகிய அணையிலே துயிலும் நாட்டையும்; வேல் மிடைத் தானைத் தாயம் - வேல் நெருங்கிய படையாகிய தாயத்தையும்; வீற்றிருந்து ஆள் என்றான் - வருத்தமின்றி ஆள்வாயாக என்று கூறினான். 
 |