நாமகள் இலம்பகம் |
164 |
|
296 |
பானாட் பிறைமருப்பிற் பைங்கண்வே ழம்பகுவா |
|
யோர்பையணன் மாநாகம் வீழ்ப்பத் |
|
தேனார் மலர்ச்சோலைச் செவ்வரையின் மேற்சிறு |
|
பிடிகள்போ லத்துய ருழந்துதா |
|
மானா தடியேம்வந் தவ்வுலகி னின்னடி |
|
யடைதுமென் றழுதுபோ யினாரெங் |
|
கோனார் பறிப்ப நலம்பூத்த விக்கொடி |
|
யினிப்பூ வாபிறர் பறிப்பவே |
|
(இ - ள்.) தேன்ஆர் மலர்ச்சோலைச் செவ்வரையின்மேல் - தேன் நிறைந்த மலர்ச்சோலையையுடைய செவ்விய மலையின்மேல்; பகுவாய் பைஅணல் ஓர்மா நாகம் - பெரிய வாயையும் படத்தையும் கீழ்வாயையும் உடையதொரு பெரும் பாம்பு; பால்நாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் வீழ்ப்ப - அரைத்திங்களனைய மருப்பினையும் பசிய கண்ணையும் உடைய களிற்றை வீழ்த்தியதால்; சிறு பிடிகள் போலத் தாம் துயர்உழந்து - (அக்களிறு காத்தற்குரிய) சிறுபிடிகள் அக்காவலை யிழந்து வருந்துமாறுபோலத் தாங்கள் வருந்தி ; எம்கோனார் பறிப்ப நலம்பூத்த இக்கொடி பிறர் பறிப்பப் பூவா - எம் இறைவர் பறிப்பதற்காக அழகினை மலர்ந்த இக்கொடிகள் இனியும் பிறர் பறிக்குமாறு மலரா; அடியேம் வந்து அவ்வுலகில் நின்அடி அடைதும் - (ஆகவே) அடியேங்கள் அவ்வுலகிற்கு வந்து நின் திருவடிகளை அடைவோம் ; என்று ஆனாது அழுது போயினார் - என்று கூறி அமைதியின்றி அழுது நீங்கினர்.
|
|
(வி - ம்.) 'சிறுபிடிகள்' எனவே அக்களிறு கூடுதற்குரிய குலத்திற்கு பிறந்த கொடிகள் அல்ல என்பது பெற்றாம். 'இக்கொடி' என்றார் தம்மைப் பிறர்போல. இவர்கள் அரசற்குக் காமம் ஒழிந்த நுகர்ச்சி கொடுத்தற்குரிய [பணி] மகளிர்.
|
( 267 ) |
297 |
செங்கட் குறுநரியோர் சிங்கவேற் றைச்செகுத்தாங் |
|
கதனிடத்தைச் சோ்ந்தா லொப்ப |
|
வெங்கட் களியானை வேல்வேந் தனைவிற |
|
லெரியின்வாய்ப் பெய்தவன் பெயர்ந்துபோய்ப் |
|
பைங்கட் களிற்றின்மேல் தன்பெயரி னாற்பறை |
|
யறைந்தான் வேன்மாரி பெய்தாலொப்ப |
|
வெங்க ணவருமினைந் திரங்கினா ரிருண்மனத்தான் |
|
பூமகளை யெய்தி னானே. |
|
(இ - ள்.) செங்கண் சிறுநரி ஓர்சிங்க ஏற்றைச் செகுத்து - சிவந்த கண்களையுடைய சிறுநரி ஒன்று, ஓர் ஆண் சிங்கத்தைக்
|
|