| முத்தி இலம்பகம் |
1640 |
|
|
|
(வி - ம்.) நாகு - நத்தை. சுரிமுகம் : வினைத்தொகை. ஆன் ஏற்றையூர்ந்து என ஒட்டுக. நாகிளந்தேரை : ஒருபொருட்பன்மொழி. கதிரணை : பண்புத்தொகை. தாயம் - அரசுரிமை. ஆண்மோ என்புழி, ‘மோ‘ முன்னிலையசை.
|
( 303 ) |
| 2902 |
கரும்பலாற் காடொன் றில்லாக் | |
| |
கழனிசூழ் பழன நாடுஞ் | |
| |
சுரும்புலாங் கண்ணி விண்ணோர் | |
| |
துறக்கமும் வீடும் வேண்டே | |
| |
னரும்புலா யலர்ந்த வம்மென் | |
| |
றாமரை யனைய பாதம் | |
| |
விரும்பியான் வழிபட் டன்றோ | |
| |
வாழ்வதென் வாழ்க்கை யென்றான். | |
|
|
(இ - ள்.) கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடு - கரும்பையன்றி வேறு காடு இல்லாத கழனி சூழ்ந்த பழனமுடைய நாட்டையும்; சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன் - வண்டுகள் உலவும் கண்ணியையுடைய வானோர் துறக்கத்தையும் வீட்டையும் விரும்புகிலேன்; அரும்பு உலாய் அலர்ந்த அம்மென் தாமரை அனைய பாதம் - அரும்பு நெகிழ்ந்து மலர்ந்த அழகிய மெல்லிய தாமரை போன்ற நின் அடிகளை; யான் விரும்பி வழிபட்டு வாழ்வதன்றோ என் வாழ்க்கை என்றான் - நான் விரும்பி வழி பட்டு வாழ்வதே என் வாழ்க்கை என்றான்.
|
|
(வி - ம்.) பழனம் : மருதநிலம். என் வாழ்க்கை நின் பாரதம் வழி பட்டு வாழ்வதாகையால் இவற்றை வேண்டேன் என்றான்.
|
( 304 ) |
| 2903 |
குன்றென மருண்டு கோல | |
| |
மணிவண்டுங் குழாங்கொ டேனுஞ் | |
| |
சென்றுமொய்த் திமிரும் யானைச் | |
| |
சீவகற் கிளைய நம்பி | |
| |
மன்றல்வீற் றிருந்து மின்னு | |
| |
மணிக்குவ டனைய தோளா | |
| |
னொன்றுமற் றரசு வேண்டா | |
| |
னுவப்பதே வேண்டி னானே. | |
|
|
(இ - ள்.) குன்று என மருண்டு கோலமணி வண்டும் குழாம் கொள் தேனும் - மலையென மயங்கி அழகிய கருவண்டும் குழுவாகிய தேனும்; சென்று மொய்த்து இமிரும் யானை - போய் மொய்த்து முரலும் யானையையுடைய; சீவகற்கு இளைய
|