பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1643 

2907 வாய்ப்பட லின்றிப் பொன்றும்
  வல்லனாய் மன்னன் கொள்ளி
னீத்தநீர் ஞால மெல்லா
  நிதிநின்று சுரக்கு மன்றே.

   (இ - ள்.) நாளும் வரிசையின் அரிந்து காய்த்த நெல் கவளம் தீற்றின் - நாடோறும் முறைமைப்படி அரிந்து, காய்த்த நெல்லாகிய கவளத்தைக் களிற்றிற்குத் தீற்றினால்; வாய்ப்படும் - அதற்கு உணவும் ஆம்; கேடும் இன்றாம் - அழிவும் இன்றாகும்; களிறுதான் கழனி மேயின் - அங்ஙனம் தீற்றாத களிறு கழனியிலே தானே சென்று மேய்ந்தால்; வாய்ப்படல் இன்றிப் பொன்றும் - உணவாதலின்றி அழிந்துவிடும், மன்னன் வல்லனாய்க் கொள்ளின் - அரசன் கொள்ள வல்லனாகி முறைமையாற் கொண்டால்; நீத்த நீர் ஞாலம் எல்லாம் நின்று நிதி சுரக்கும் - கடலாகிய நீர் சூழ்ந்த உலகம் அவன் வழிநின்று செல்வத்தைக் கொழிக்கும்.

   (வி - ம்.) ”காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே

மாநிறை வில்லதம் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே” (புறநா.184)

   என்பதை இப் பகுதியுடன் ஒப்பிடுக.

( 309 )
2908 நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா
  நீருயி ரிரண்டுஞ் செப்பிற்
புல்லுயிர் புகைந்து பொங்கு
  முழங்கழ விலங்கு வாட்கை
மல்லலங் களிற்று மாலை
  வெண்குடை மன்னர் கண்டாய்
நல்லுயிர் ஞாலந் தன்னு
   ணாமவே னம்பி யென்றான்.

   (இ - ள்.) மாந்தர்க்கு எல்லாம் நெல் உயிர், நீர் உயிர் - உலக மக்கட்கெல்லாம் நெல்லும் உயிர், நீரும் உயிர்; செப்பின் இரண்டும் புல்லுயிர் - ஆராய்ந்துரைப்பின் இவ்விரண்டும் சிறந்த