பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1646 

   (வி - ம்.) 'குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

   அடிதழீஇ நிற்கும் உலகு.'

( 313 )
2912 சேனடந் தாங்கு மோடிச்
  சென்றுலாய்ப் பிறழும் வாட்கண்
மான்மட நோக்கின் மாதர்
  மாலைநாட் பயந்த மைந்தன்
கானடந் தனைய மான்றோ்க்
  காளையைக் காவன் மன்னன்
றானுட னணிந்து தன்போ
  லிளவர சாக்கி னானே.

   (இ - ள்.) சேல் நடந்தாங்கு ஓடிச் சென்று உலாய்ப் பிறழும் வாள்கண் - சேற்கெண்டை நடந்தாற்போல ஓடிச் சென்று உலவிப் பிறழும் ஒளிருங் கண்ணினையும்; மான்மட நோக்கின் - மான் போலும் மடநோக்கினையும்; மாதர் மாலை - காதலையும் உடைய குணமாலை; நாள் பயந்த மைந்தன் - முதற்பெற்ற மைந்தனாகிய; கால் நடந்த அனைய மான்தேர்க் காளையை - காற்று விரைந்து சென்றாற் போன்ற குதிரை பூட்டிய தேரையுடைய காளையாகிய சுதஞ்சணனை; காவல் மன்னன் தான் - சீவகன்றான்; உடன் அணிந்து - உடனிருந்து பட்டங்கட்டி; தன்போல் இளவரசு ஆக்கினான் - தான் கந்துக்கடன் நாளில் இளவரசாக இருந்ததுபோல இளவரசு ஆக்கினான்.

   (வி - ம்.) என்றது, தன் குலத்திற்கேற்ற நுகர்ச்சியை எய்தும் அரசுரிமையை. நடந்தாங்கும் : உம் : இசைநிறை.

   சேல்நடந்தாங்கு என்புழி நடத்தல் இயக்கம் என்பதுபட நின்றது. மாலை : குணமாலை. கால் - காற்று. காளை : சுதஞ்சணன் கானடந்தனைய என்பதற்கு, தன்கால் நடந்தாற்போல மனம் கருதியதே செய்யும் என்றும் கூறலாம் என்பர் நச்சினார்க்கினியர்.

( 314 )
2913 கூரெயி றணிந்த கொவ்வைக்
  கொழுங்கனிக் கோலச் செவ்வா
யேரணி மயிலஞ் சாய
  லிலக்கணை யீன்ற சிங்கஞ்
சீருடைச் செம்பொற் கண்ணிச்
  சிறுவனைச் செம்பொன் மாரி
பேரறைந் துலக முண்ணப்
  பெருநம்பி யாக வென்றான்.