| முத்தி இலம்பகம் |
1647 |
|
|
|
(இ - ள்.) கூர் எயிறு அணிந்த கொவ்வைக் கொழுங்கனிக் கோலச் செவ்வாய் - கூரிய முறுவலையுடைய கொவ்வைச் செழுங்கனி போன்ற ஒப்பனை செய்த செவ்வாயையும்; ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம் - எழுச்சியுறும் அழகைக் கொண்ட மயில் போன்ற மென்மையுடைய இலக்கணை பெற்ற சிங்கமாகிய; சீருடைச் செம்பொன் கண்ணிச் சிறுவனை - அழகுறுஞ் செம்பொன் கண்ணிபுனைந்த கோவிந்தனை; உலகம் பேர் அறைந்து செம்பொன்மாரி உண்ண - உலகெல்லாம் நின் புகழைச் சாற்றி நீ பெய்யும் செம்பொன் மழையை உண்ணும்படி; பெருநம்பி ஆக என்றான் - பெருநம்பியாக இருப்பாய் என்றான்.
|
|
(வி - ம்.) என்றது, சச்சந்தனுக்குப் பின்னர்க் கொவிந்தன் அரசாள உரிமை கொடுத்தான்.
|
|
சிறுவன் என்றது இலக்கணை மகனான கோவிந்தனை. பெருநம்பி என்றது இளவரசு என்பது போன்றதொரு சிறப்புப்பெயர் என்க.
|
( 315 ) |
| 2914 |
தன்கழ றொழாத மன்னர் | |
| |
தாஞ்சுமந் தேந்தி நின்ற | |
| |
பொன்றிக ழுருவிற் றம்பி | |
| |
புதல்வனைத் தந்து போற்றி | |
| |
மின்றிகழ் முடியுஞ் சூட்டி | |
| |
வீற்றிரீஇ வேந்து செய்தான் | |
| |
குன்றினங் குழீஇய போலுங் | |
| |
குஞ்சரக் குழாத்தி னானே. | |
|
|
(இ - ள்.) குன்று இனம் குழீஇய போலும் குஞ்சரக் குழாத்தினான் - மலைக்கூட்டம் திரண்டன போன்ற யானைத் திரளையுடைய சீவக மன்னன்; தன்கழல் தொழாத மன்னர் - தன் அடியை முன்பு வணங்காத வேந்தர்; தாம் சுமந்து ஏந்தி நின்ற பொன்திகழ் உருவின் - (பின்னர்) வணங்கித் திறையாக எடுத்த பொன்னாற் செய்த பூண் விளங்கும் வடிவையுடைய; தம்பி புதல்வனைத் தந்து போற்றி - தம்பி மகனை அழைத்துப் போற்றி; மின்திகழ் முடியும் சூட்டி வீற்றிரீஇ - மின் விளங்கும் ஒரு முடியையும் அணிவித்து வீற்றிருக்கச் செய்து; வேந்து செய்தான் - (குறுநில) மன்னன் ஆக்கினான்.
|
|
(வி - ம்.) 'குஞ்சரக் குழாத்தினான் : சீவகன் மகன் சச்சந்தன்' என விளக்கங் கொடுத்து நச்சினார்க்கினியர் கூறுவது :
|
|
”படையுங் கொடியும்' (தொல். மரபு : 7) என்னுஞ் சூத்திரத்தால் அரசர்க்கே முடி கூறினமையாலும், 'வில்லும் வேலும்' (தொல்.
|