பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1649 

மார்பின் - மண்ணைக் கொள்ளும் போரிலே வேலுக்கு இடங்கொடுத்த மார்பினையும் உடைய; வில்வலான் தோழர் மக்கள் - வில்வலானாகிய சீவகன் தோழருடைய மக்களாகிய; பாற்கடல் கேள்வியாரை - பாற்கடல்போலத் தூய நூற்கேற்வியுடையாரை; நாற்கடல் வளாகம் காக்கும் நம்பி தன் கண்கள் ஆக - நான்கு புறத்தினும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பை ஆளும் நம்பி சச்சந்தனின் கண்களாக; பழிப்பு அற நாட்டினான் - குற்றம் இன்றி நிறுத்தினான்.

   (வி - ம்.) செவியையும் மார்பையும் உடைய தோழர் என்க. தன்தோழர் தனக்குச் செய்த தொழில்களை அவர் மக்களும் இவற்குச் செய்க என்றான்.

'சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

   சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்' (குறள். 445)

( 318 )
2917 காவல ரகல மென்னுங் கழனியு ளுழுது காமர்
மாவலம் விளைத்த கோட்டு மழகளிற் றரச னன்னான்
பூவலர் கொடிய னாரை விடுக்கிய கோயில் புக்கான்
றூவல ரொலிய லார்தம் வலக்கண்க டுடித்த வன்றே.

   (இ - ள்.) காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது - பகை மன்னரின் மார்பாகிய கழனியிலே உழுது; காமர் மாவலம் விளைத்த கோட்டு மழகளிறு அன்னான் அரசன் - விரும்பத்தக்க திருத்தங்கும் வெற்றியை விளைத்த கோட்டினையுடைய மழகளிறு போன்றானாகிய அரசன்; பூ அலர் கொடி அனாரை விடுக்கிய - மலர் மலர்ந்த கொடி போன்றவரை இல்லறப் பற்றினின்றும் விடுவித்தற்கு; கோயில் புக்கான் - அரண்மனையிலே புகுந்தான்; தூஅலர் ஒலியலார்தம் வலக்கண்கள் துடித்த - (அப்போது ) தூய்தாக அலர்ந்த மாலையணிந்த அவர்களின் வலக்கண்கள் துடித்தன.

   (வி - ம்.) மா : பெருமையும் ஆம், செல்வச் செருக்கின்றிச் சாரணர் கூறிய அறத்தின்வழிச் சேறலின் மதமின்றிப் பாகனுடைய தோட்டியை நீக்காத களிற்றினையும், புதல்வர்களைப் பெற்றுப் பயன் கொடுத்தலின் பூவலர்ந்த கொடியையும் உவமித்தார். 'தூவலர்க்கொடியனார்' என்று பாடம் ஓதி, 'ஒழிகின்ற அலர்களையுடைய கொடியனையார்' என்றுமாம். தூவுதல் - ஒழிதல்.

( 319 )

22 துறவுணர்த்தல்

2918 செம்பொனாற் செறிய வேய்ந்து
  திருமணி முகடு கொண்ட
வெம்புநீள் சுடருஞ் சென்னி
  விலங்கிய மாட மெய்தி