நாமகள் இலம்பகம் |
165 |
|
கொன்று; ஆங்கு அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப - அங்கே அச் சிங்கத்தின் இடத்தை அடைந்தாற்போல; வெங்கண் களியானை வேல்வேந்தனை விறல் எரியின்வாய்ப் பெய்தவன் - கொடுமையுடைய மதயானையும் வேலுங் கொண்ட சச்சந்த மன்னனை ஆற்றலையுடைய எரியில் இட்ட கட்டியங்காரன்; பெயர்ந்து போய்ப் பைங்கண் களிற்றின்மேல் தன் பெயரினால் பறையறைந்தான் - நீங்கிச் சென்று பசிய கண்களையுடைய களிற்றின்மேல் தான் அரசன் என அறிவித்துப் பறையறைவித்தான்; வேல்மாரி பெய்தால் ஒப்ப எங்கணவரும் இணைந்து இரங்கினார் - வேல்மழை பெய்தாற்போல எங்குள்ளவரும் அப்பறையொலி கேட்டு வருந்தியழுதனர்; இருள் மனத்தான் பூமகளை எய்தினான் - இவ்வாறு கரிய மனமுடைய கட்டியங்காரன் நிலமகளை அடைந்தான்.
|
|
(வி - ம்.) நரி சிங்கத்தின் இடத்தை அடைந்தாற் சிங்கம்போலத் தொழில் நடத்தாது; தன் இழிதொழிலேயே நடத்தும். கட்டியங்காரன் கருத்தால் மகளிர் சச்சந்தனை எரியிற் பெய்தலின் அதனை அவன் தொழிலாக்கினார்.
|
|
[நச்சினார்க்கினியர் 'விறலெரி' என்பதிலுள்ள 'விறல்' என்னுஞ் சொல்லையும், 'பெய்து அவன்' என்பதிலுள்ள 'அவன்' என்னுஞ் சொல்லையும் இணைத்து 'விறலவன்' எனக் கட்டியங்காரனுக் காக்கி 'இஃது இகழ்ச்சி' என்பர்.]
|
( 268 ) |
சீவகன் பிறப்பு
|
|
வேறு
|
|
298 |
களிமுகச் சுரும்புண் கோதை |
|
கயிலெருந் தசைந்து சோர |
|
வளிமுகச் சுடரி னில்லா |
|
மனத்தொடு மயங்கி யிப்பாற் |
|
சுளிமுகக் களிற னான்றன் |
|
சொன்னய நெறியிற் போய |
|
கிளிமுகக் கிளவிக் குற்ற |
|
திற்றெனக் கிளக்க லுற்றேன். |
|
(இ - ள்.) களிமுகச் சுரும்புஉண் கோதை கயில் எருத்து அசைந்து சோர - களிக்கும் நெறியினையுடைய சுரும்புகள் தேனைப் பருகும் மலர்மாலை அணிகலன் அணிந்த கழுத்திலே குலைந்து வீழ; வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி - காற்றின் எதிரில் நில்லாத விளக்குப்போல நிலையற்ற உள்ளத்தோடு மயக்கமுற்று; சுளிமுகக் களிறனான்தன் சொல்நய நெறியில் போய - களித்த முகமுடைய களிறுபோன்ற சச்சந்தன் கூறிய சொல்லின் பயனை உட்கொண்டு சென்ற; கிளிமுகச் கிள
|
|