பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1650 

2918 யம்பொனாற் றெளிந்த பாவை
  யனையவர்த் தம்மி னென்றான்
பைம்பொனால் வளர்க்கப் பட்ட
  பனைதிரண் டனைய தோளான்.

   (இ - ள்.) பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனைதிரண்டனைய தோளான் - புதிய பொன்னால் வளர்க்கப்பட்ட பனைதிரண்டாற் போன்ற தோளையுடைய சீவகன்; செம்பொனால் செறிய வேய்ந்து திருமணி முகடு கொண்ட - உயர்ந்த பொன்னால் நெருங்க வேய்ந்து அழகிய மணிகளால் முகடு செய்த; வெம்பு நீள் சுடரும் விலங்கிய சென்னி மாடம் எய்தி - வெம்மை தரும் நீள் கதிரும் விலங்கிச் செல்லும் உச்சியையுடைய மாடத்தை அடைந்து; அம் பொனால் தெளிந்த பாவை அனையவர்த் தம்மின் என்றான் - அழகிய பொன்னாற் செய்து தெளிந்த பாவை போன்றவரை அழைத்து வம்மின் என்றான்.

   (வி - ம்.) முகடு கொண்ட மாடம், விலங்கிய மாடம் எனத் தனித்தனியே இயைக்க. 'அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் - தத்தம் பொருள் மிகுதியாற் செல்வம் நன்றென்று துணியப்பட்ட, பாவை போல்வார்' என்றுமாம்.

( 320 )

வேறு

2919 தின்பளித மாலைத்திர டாமந் திகழ் தீம்பூ
நன்கொளிசெய் தாமநறும் பூநவின்ற தாமம்
பொன்றெளித்த தாமம்புரி முத்தமிளிர் தாம
மின்றெளித்த மின்னுமணி வீழ்ந்ததிர டாமம்.

   (இ - ள்.) தின் பளிதம் மாலைத்திரள் தாமம் - தின்னப் படும் கருப்பூர வொழுங்கால் திரண்ட தாமம்; திகழ்தீம்பு நன்கு ஒளிசெய் தாமம் - விளங்கும் தீம்பூ மிகவும் ஒளிசெய்கின்ற தாமம்; நறும்பூ நவின்ற தாமம் - நல்ல மலரால் இயன்ற தாமம்; பொன் தெளித்த தாமம் - பொன் தகட்டை ஒப்பம் புரிந்த தாமம்; புரி முத்தம் மிளிர் தாமம் - விரும்பும் முத்துக்களால் விளங்கும் தாமம்; மின் தெளித்த மின்னு வீழ்ந்த மணி திரள் தாமம் - மின்னென்று தெளிவித்த மின்னுத் தங்கிய மணியினால் திரண்ட தாமம்.

   (வி - ம்.) அடுத்த செய்யுளுடன் தொடர்ந்தது

( 321 )
2920 ஈன்றமயில் போனெடிய தாமத் திடையெங்கு
மான்றுமணம் விம்முபுகை மல்கிநுரை யேபோற்
றோன்றுமணிக் காலமளித் தூவணையின் மேலார்
மூன்றுலகம் விற்குமுலை முற்றிழையி னாரே.