பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1654 

   அட்டுநீர் - ஒழுகும் நீர். வைரம் - ஒரு மணி. குட்டம் - ஆழம். வினவிக் கேண்மின் என்றது நன்கு கூர்ந்து கேண்மின் என்பதுபட நின்றது.

( 327 )
2926 நரம்பொலி பரந்த கோயி
  னன்னுதன் மகளிர் தூவும்
பெரும்பலிச் சோற்றி னீதல்
  பெரிதரி தாகு மேனுஞ்
சுரும்பொலி கோதை யார்த
  மனைவயிற் றூண்டோ றூட்டு
மரும்பலி யனைத்து மீயி
  னதுபொருட் குன்று கண்டீர்.

   (இ - ள்.) நரம்பு ஒலி பரந்த கோயில் - யாழிசை பரவிய கோயிலில்; நன்னுதல் மகளிர் தூவும் பெரும்பலிச் சோற்றின் அழகிய நெற்றியையுடைய அரசியர் தெய்வங்கட்குத் தூவுகிற பெரிய பலியாகிய சோற்றைப் போல; பெரிது ஈதல் அரிது ஆகுமேனும் - மிகக் கொடுத்தல் மிடியர்க்கு அரிதாயிருக்குமாயினும்; சுருப்பு ஒலி கோதையார்தம் மனைவயின் தூண்தொறு ஊட்டும் - வண்டு முரலும் மலர் மாலையணிந்த மகளிர் தம் இல்லங்களில் தூணில் உறையுந் தெய்வங்கட்குத் தூவுகின்ற; அரும்பலி அனைத்தும் ஈயின் - அரிய பலியளவேனும் ஈவார்களாயின்; அது பொருட் குன்று - அத் தானம் பின்னர் அவருக்கு மேருவாகி நிற்கும்.

   (வி - ம்.) பெரும்பலிச் சோறுபோல மிக ஈதல் அரிதாகுமாயினும் தூண்தொறும் ஊட்டும் சிறுபலி போலச் சிறிதே ஈயினும் அத்தானம் பின்பு மேருமலை போன்ற பெரும்பயனை நல்கும் என்றவாறு.

( 328 )
2927 அற்றவர் வருத்த நீக்கி
  யாருயிர் கொண்டு நிற்குந்
துற்றவி ழீதல் செம்பொற்
  றுறக்கத்திற் கேணி யாகு
முற்றுயி ரோம்பித் தீந்தே
  னூனொடு துறப்பின் யார்க்கு
மற்றுரை யில்லை மண்ணும்
  விண்ணுநும் மடிய வன்றே.

   (இ - ள்.) அற்றவர் வருத்தம் நீக்கி - வறியவர் வருத்தத்தை நீக்கி; ஆர் உயிர் கொண்டு நிற்கும் அவிழ் ஈதல் - சிறந்த