பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1657 

   (வி - ம்.) 'நல்வினை காண்மின்' என்றான் 'நல்வினை செய்தாற் கூற்றைத் தப்பிப் போதலுங் கூடும்' எனற்கு.

”கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.” (குறள், 369)

   என்பது பற்றிப் ”புள்ளுவர்கையினும் உய்யும் புள்ளுள” என்று எடுத்துக்காட்டி அதுபோல யாமும் நல்வினைசெய்தால் கூற்றம் குதித்தலும் கூடும் என்றான் என்க. ஓள்ளியான் - அறிவுடையான். உரைத்தது என்றது, பயனின்றாக உரைத்தது என்பதுபட நின்றது. அறத்தினைச் சொல்லளவாகவே கருதி விடாமல் நுங்கள் ஒழுக்கத்தினும் மேற்கொண்மின் என்பதாம்.

( 333 )
2932 மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுந்
தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்
வாய்புகப் பெய்யினும் வழுக்கி னல்லறங்
காய்வது கலதிமைப் பால தாகுமே.

   (இ - ள்.) மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலும் உடைமையை - இறத்தலும் பிறத்தலும் வளர்ந்து பருத்தலும் தேய்தலும் யாக்கை உடைமையை; திங்கள் செப்பும் - திங்கள் அறியாதாருக்கும் கூறும்; நல்லறம் வாய் புகப்பெய்யினும் - நல்லறத்தைச் செவியிலே புகும்படி சொரியினும்; வழுக்கிக் காய்வது - அதனைக் கைவிட்டு வெறுப்பது; கலதிமைப் பாலது - தீவினையின் கூறாகும்.

   (வி - ம்.) திங்கள் காட்டக் கண்டும், அறத்தைச் சொரியக் கேட்டும் கைவிடுவது தீவினையின் பாலதாம் என்று கொள்க.

   ”தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் - மாய்தலுண்மையும் பிறத்த லுண்மையும் - அறியாதோரையும் அறியக் காட்டித் - திங்கட்புத்தேள் திரிதரும் உலகத்து” (புறநா. 27) என்றார் பிறரும்.

( 334 )
2933 புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலா
லுள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரற
முள்குமேன் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய்
வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே.

   (இ - ள்.) புள்ளி நீர் வீழ்ந்தது - சுக்கிலம் கருப்பைக் குள்ளே வீழ்ந்தது; உள் பெருகிப் புன்புலால் வளர்ந்து - உள்ளே பெருத்துப் புன்மையான ஊன் வளர்ந்து; ஒரு வழித் தோன்றி - புக்க வழியாலே புறப்பட்டு; பேர் அறம் உள்குமேல் - அறிவு பெற்று அறத்தை நன்றென்று கொள்ளுமாயின்; முழுப்புலால் குரம்பை உய்ந்து போய் - (அது) முற்றும் ஊனாலாகிய கூட்டை