பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1658 

விட்டுப்போக; வெள்ளநீர் இன்பமே விளைக்கும் - கடல்போலப் பெரிய வீட்டின்பத்தை விளைவிக்கும்.

   (வி - ம்.) என்க, ஏ : அசைகள். போய் போக : எச்சத்திரிபு.

   சுக்கிலத்தின் சிறுமைதோன்றப் புள்ளிநீர் என்றார். 'புள்ளிநிலனும் புரைபடல் அரிது' (பரிபா. 2 . 37) என்புழிப்போல. புள்ளி சிறுமைக் கோர் அளவு கூறியபடியாம். புக்க அவ்வொருவழியாலே புறப்பட்டு என்றவாறு. புலால்குரம்பை என்றது உடம்பினை. வெள்ளநீர் என்றது கடலினை.

( 335 )
2934 பாற்றுளி பவளநீர் பெருகி யூன்றிரண்
டூற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின்
சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக்
காற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே.

   (இ - ள்.) பால்துளி பவளநீர் பெருகி - சுக்கிலமும் குருதியும் பெருத்து; ஊன் திரண்டு - தசை திரண்டு; ஊற்றுநீர்க் குறும்புழை உய்ந்து போந்தபின் - இடையறாது ஊறும் நீரையுடைய சிறு வாயிலாலே தப்ப வந்த பின்னர்; செல்கதிக்கு ஆற்றுணாப் பெறாது - (அறங்கொள்ளாதாயின்) செல்லும் நெறிக்கு நல்வினையாகிய பொதிசோற்றைப் பெறாது சென்று; சோற்றுநீர்க் குழியுளே அழுது அலறி - நரகத்தே கிடந்து அழுது கூவி; வீழும் - (மீட்டும் அக்குறிய, ஊற்று நீரையுடைய குழியிலே) அழுந்தி வீழும்.

   (வி - ம்.) பாற்றுளி என்றது, சுக்கிலத்தை. பவளநீர் என்றது சுரோணிதத்தை. குறும்புழை:   இடக்கர். 'பருகி' என்று பாடமாயின் 'உள்ளடக்கி' என்க. சேற்று நீர்க்குழி என்றது நரகத்தை. வீழும் என்றது, மீட்டும் அக் குறும்புழைக்குள்ளே வீழும் என்பதுபட நின்றது.

( 336 )
2935 திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினு மறந்திற மறத்த லோம்புமின்
கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணீர்.