| முத்தி இலம்பகம் |
1659 |
|
|
|
(வி - ம்.) ”அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
|
| மறத்தலி னூங்கில்லை கேடு” (குறள்.32) |
|
|
என்பது வள்ளுவர் வாய்மொழி.
|
( 337 ) |
| 2936 |
மந்திர மருந்திவை யில்லை யாய்விடி | |
| |
னைந்தலை யரவினை யாவர் தீண்டுவார் | |
| |
சுந்தரச் சுரும்புசூழ் மாலை யில்லையேன் | |
| |
மைந்தரு மகளிரை மருங்கு சோ்கிலார். | |
| |
|
|
(இ - ள்.) மந்திரம் மருந்து இவை இல்லையாய்விடின் - (உலகில்) மந்திரமும் மருந்துமாகிய இவை இல்லாமற் போய்விடின்; ஐந்தலை அரவினை யாவர் தீண்டுவார்? - ஐந்து தலையுடைய பாம்பை எவர் தீண்டி வயப்படுத்துவார்?; சுந்தரச் சுரும்பு சூழ் மாலை இல்லையேல் - (அவ்வாறே) அழகிய வண்டுகள் சூழும் இயல்புடை மாலை முதலிய மணப்பொருள்கள் இல்லையாயின்; மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார் - மைந்தரும் மகளிரின் அருகே சென்று அவரைத் தம் வயத்தராக்குதலிலர்.
|
|
(வி - ம்.) பாம்பாட்டுவோர் மந்திரமும் மருந்துமுண்மையால் அதன் நஞ்சுடைமைக்கு அஞ்சாமல் அதனைத் தீண்டுகின்றனர். இங்ஙனமே மணமாலை முதலிய நறுமணப் பொருள்கள் உண்மையால் ஆடவர் மகளிர்க்கு இயல்பாயமைந்த தீநாற்றத்திற்கு அஞ்சாமல் அவரை முயங்குகின்றனர் என்றவாறு. இங்ஙனம் கூறாமல் ஆசிரியர் நச்சினார்க்கினியர், ”நன்றாகிய நறுநாற்றங்களாற் சுரும்பு சூழும் இயல்பு தமக்கில்லையாயின் மைந்தரும் மகளிரருகே சென்று அவரைத் தம் வயத்தராக்குதலிலர்” என்பர். இவ்வுரையில் பொதுத்தன்மை விளங்காமையுணர்க.
|
( 338 ) |
| 2937 |
பொன்றுலாம் பொன்னனீர் தருதும் பாகுநீர் | |
| |
தின்றலாற் சிறுவரை யானுஞ் சொற்சில | |
| |
வின்றெலா மெம்மருங் கிருந்து பேசினால் | |
| |
வென்றுலாம் வேற்கணீர் விழுத்தக் கீர்களே. | |
| |
|
|
(இ - ள்.) பொன் அனீர்! - திருமகளனையீர்!; வென்று உலாம் வேல்கணீர்! - வென்று உலவும் வேலனைய கண்ணீர்!; நீர் பாகு தின்று விழுத்தக்கீர்கள் அலால் - நீர் (வெற்றிலையுடன்) பாகுதின்று தகுதிப்பாடுடையீராய் இல்லாமல்; இன்று எலாம் எம் மருங்கு இருந்து - இன்று முற்றும் எம் அருகேயிருந்து; சிறுவரை யானும் சில சொல் பேசினால் - சிறிது போதேனும் சில சொற்களைப் பேசினால்; துலாம் பொன் தருதும் - ஒரு துலாம் பொன் தருவேம்.
|
|
(வி - ம்.) 'முன்னர்ப் பாகுதின்று அருகேயிருந்து பேசுவீர்; இப்போது பாகுதின்னாமற் பேசுதலரிது' என்றானாயிற்று.
|
( 339 ) |