பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 166 

விக்கு இப்பால் உற்றது இற்றுஎனக் கிளக்கல் உற்றேன் - கிளியனைய மொழியாட்கு இப்பால் நேர்ந்தது இத்தன்மைத்தென்று கூறத் தொடங்கினேன்.

 

   (வி - ம்.) களிமுகம் - களிக்கின்ற நெறி. கயில் - மூட்டுவாய் ; ஆகுபெயரால் அணிகலனை உணர்த்தியது.

( 269 )
299 எஃகென விளங்கு வாட்க
  ணெறிகட லமிர்த மன்னா
ளஃகிய மதுகை தன்னா
  மனத்தொடு மயங்கி யிப்பாற்
வெஃகிய புகழி னான்றன்
  வென்றிவெம் முரச மார்ப்ப
வெஃகெறி பிணையின் மாழ்கி
  யிறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள்..

   (இ - ள்.) எஃகுஎன விளங்கு வாள்கண் எறிகடல் அமிர்தம் அன்னாள் - கூர்மையே இதன் வடிவம் என்று விளங்கும் வாளனைய கண்களையுடைய, அலைகடலில் எழுந்த அமிர்தம் அன்னாள் ஆகிய விசயை; அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊரும் ஆங்கண் - (கணவனை நீங்குலால்) குறைந்த ஆற்றலுடன் விசை குறைந்த மயிலைச் செலுத்தும் அவ்வாளிலே; வெஃகிய புகழினான் தன் வென்றி வெம்முரசம் ஆர்ப்ப - (அரசனாக) விரும்பிய புகழினானது கொடிய வெற்றி முரசு ஒலிக்க; எஃகு எறிபிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் - (அது கேட்டு) வேலால் அடியுண்ட பெண்மானென மனம் மயங்கி மூர்ச்சித்துத் தன்னை மறந்து சோர்ந்தாள்.

 

   (வி - ம்.) இது கையாறாதலிற் பொறியை இடத்தே திரித்தல் இயலாமை நேர்ந்தது. [கையாறு - செயலறுதல்.]

 

   எஃகென விளங்கு வாட்கண் என்பதற்கு வேலென விளங்காநின்ற ஒளியையுடைய கண் எனினுமாம். அஃகிய மதுகை - குறைந்த வலிமை ஆய்மயில் - வேகஞ் சுருங்கிய மயிற்பொறி. ”ஓய்தல், ஆய்தல், நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” (உரி - 32.) என்பர் தொல்காப்பியனார். வெஃகிய புகழினான் - வேந்தன் அல்லனாகவும் அவ் வேந்தற்குரிய புகழைக் கவர்ந்தவன்; என்றது கட்டியங்காரனை. வெஃகுதல் - பிறர் பொருளைக் கவர்தல். வென்றிவெம் முரசம் என்றது இகழ்ச்சி எஃகு - வேல்.

( 270 )
300 மோடுடை நகரி னீங்கி
  முதுமரந் துவன்றி யுள்ளம்
பீடுடை யவரு முட்கப்
  பிணம்பல பிறங்கி யெங்குங்