| முத்தி இலம்பகம் |
1660 |
|
|
வேறு
|
| 2938 |
மெய்ப்படு சாந்தும் பூவு | |
| |
மிகநனி கமழு மேனுங் | |
| |
கைப்படு சாந்தும் பூவுங் | |
| |
கொண்டலாற் கலக்க லாகா | |
| |
வைப்படு பித்து நெய்த்தோ | |
| |
ரசும்புசோ ரழுகற் புன்றோற் | |
| |
பொய்ப்பட வுரைத்த துண்டோ | |
| |
பொன்னனீர் நம்மு ணாமால். | |
|
|
(இ - ள்.) பொன் அனீர்! - திருவனையீர்!; நம்முள் நாம் - நம்முள் நாமே கூறுகின்றோம்; ஐப்படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் - ஐயுடன் கூடிய பித்தும் குருதியும் அசும்பு சோர்கின்ற அழுகலையுடைய இழிந்த தோலையும் உடைய; மெய்ப்படு சாந்தும் பூவும் மிகநனி கமழுமேனும் - இம் மெய்யிலே முன்னரே அணிந்த சாந்தும் பூவும் கொண்டலால் கலக்கல் ஆகா - பின்னரும் கைவழியாகிய சாந்தும் பூவும் மிக நன்றாக மணக்குமாயின்; கைப்படு சாந்தும் பூவும் கொண்டல்லது கூடலாகா; பொய்ப்படவுரைத்ததுண்டோ? - யான்இப்போது பொய் தோன்றக் கூறியது யாதாயினும் உளதோ? (கூறுமின்).
|
|
(வி - ம்.) 'அழுகல் அசும்பு' என்று கூட்டி மலங்கள் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 340 ) |
| 2939 |
அனிச்சத்தம் போது போலத் | |
| |
தொடுப்பவே குழைந்து மாழ்கி | |
| |
யினிச்செத்தாம் பிறந்த போழ்தே | |
| |
யென்றுநா மிதனை யெண்ணித் | |
| |
தனிச்சித்தம் வைத்த றேற்றாந் | |
| |
தளர்ந்துகண் பரப்பி நோக்கிப் | |
| |
பனித்துமென் றுற்ற போழ்தே | |
| |
பழுதிலா வறிவி னென்னாம். | |
|
|
(இ - ள்.) நாம் பிறந்த போழ்தே இனிச் செந்தாம் என்று இதனை எண்ணி - நாம் பிறந்த பொழுதே இனி இறந்தோம் அல்லமோ என்று இம் மெய்யை எண்ணி; அனிச்சத்து அம்போது போல - (நூலாற் றொடுப்பவே மயங்கி வாடும்) அனிச்சமலர்போல; தொடுப்பவே குழைந்து மாழ்கி - தீவினை தொட்ட
|