| முத்தி இலம்பகம் |
1661 |
|
|
|
பொழுதே குழைந்து மயங்கி; தளர்ந்து கண் பரப்பி நோக்கி - சோர்ந்து கண்ணை விரித்துப் பார்த்து; பனித்தும் என்று - நடுங்குவோம் என்று எண்ணி; உற்ற போழ்தே தனிச்சித்தம் வைத்தல் தேற்றாம் - அறிவு உற்ற போதே தனித்த சித்தத்தை நிலைபெற வைத்தலைத் தெளியோம்; பழுதுஇலா அறிவின் என் ஆம்? - குற்றமற்ற அறிவினால் யாது பயன்?
|
|
(வி - ம்.) 'அனிச்சத்தம் போதுபோல' என்பதன்பின் 'வாடும்' என ஒரு சொல் வருவிக்க.
|
( 341 ) |
| 2940 |
நீனிறங் கொண்ட வைம்பா | |
| |
னிழன்மணி யுருவ நீங்கிப் | |
| |
பானிறங் கொண்டு வெய்ய | |
| |
படாமுலை யையிற் றூங்கி | |
| |
வேனிற மழைக்கண் டாமு | |
| |
மிமைகுறைந் தழுகி மேனி | |
| |
தானிறங் கரக்குங் காலந் | |
| |
தையலீர் மெய்ய தன்றே. | |
|
|
(இ - ள்.) தையலீர்! - மங்கையிரே!; நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல்மணி உருவம் நீங்கி - நீல நிறம் கொண்ட கூந்தல் தன்னுடைய ஒளிவிடும் அந் நீலநிறத்தை விட்டு; பால் நிறம் கொண்டு - பால்போல வெண்ணிறம் பெற்று; வெய்ய படாமுலைபையின் தூங்கி - விருப்பூட்டுஞ் சாயாத முலைகள் பைபோலத் தொங்கி; வேல்நிற மழைக்கண் தாமும் இமைஅழுகிக் குறைந்து - வேலென ஒளிரும் மழைக்கண்களும் இமை அழுகி ஒளி குறைந்து - மேனிதான் நிறம் கரக்கும் காலம் மெய்யது - மேனியும் ஒளி மறையும் முதுமைக் காலமும் வருவது மெய்யானது.
|
|
(வி - ம்.) நீல் - நீலம் : கடைக்குறை. ஐம்பால் - கூந்தல். நிழல் - ஒளி; மணி ஈண்டு நீலமணி உருவம் - நிறம். பை - தோற்பை. அதற்கு முன்னே துறப்பீராக என்பது குறிப்பெச்சம்.
|
( 342 ) |
வேறு
|
| 2941 |
குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கம | |
| |
ழஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடா | |
| |
மிஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலா | |
| |
லஞ்சினேன் றுறப்பல்யா னார்வ மில்லையே. | |
| |
|
|
(இ - ள்.) குஞ்சரம் அயா உயிர்த்த அனைய - யானை கொட்டாவி விட்டாற் போன்ற ; குய்கமழ அம் சுவை அடிசிலை
|