பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1662 

அமர்ந்து உண்டார்கள் தாம் - தாளிப்பு மணம் கமழும் அழகிய சுவையுறும் உண்டியை அமர்ந்து உண்டவர்களே; இஞ்சி மாநகர் இடும் பிச்சை ஏற்றலால் - மதிலையுடைய மாநகர் இடுகின்ற பிச்சை ஏற்பதனால்; ஆர்வம் இல்லை - செல்வத்தில் எனக்கு விருப்பம் இல்லை; அஞ்சினேன் - அரசாட்சியை அஞ்சினேன்; யான் துறப்பல் - (எனவே) (இனி) யான் துறப்பேன்.

   (வி - ம்.) குஞ்சரம் - யானை. அயாவுயிர்த்தல் - கொட்டாவி விடுதல். குய் - தாளிப்பு. அஞ்சுவை - இனிய சுவை. அமர்ந்து - விரும்பி. இஞ்சி - மதில். இது செல்வநிலையாமை கூறியபடியாம்.

( 343 )

23.அந்தப்புர விலாவணை

2942 ஒருவர்தம் வலிகெடு முடன்று பொங்கிமே
லிருவர்மற் றியைந்தெழுந் திருப்பி னென்பபோ
லுருவநுண் ணுசுப்பிற விருந்த வொண்மணிப்
பரியகட் படாமுலைப் பைம்பொற் கொம்பனீர்.

   (இ - ள்.) இருவர் உடன்று பொங்கி மேல் இயைந்து எழுந்திருப்பின் - இருவர் சினந்து பொங்கி மேலே பொருந்தி எழுந்திருப்பின்; ஒருவர் வலிகெடும் என்ப போல் - (அவர்களிடம்) அகப்பட்ட ஒருவர் வலிமை கெடும் என்பனபோல; உருவம் நுண் நுசுப்பு இற இருந்த - அழகிய நுண்ணிய இடை முரிய இருந்த; ஒண்மணிக் கண்பரிய படாமுலை - ஒள்ளிய நீலமணி போலுங் கண்களையுடைய பெரிய சாயாத முலைகளையுடைய; பைம்பொன் கொம்பு அனீர் - புதிய பொற்கொம்பு போன்றீர்!;

   (வி - ம்.) இருவர் என்றது முலைகளை. ஒருவர் என்றது, இடையை. நீலமணிபோலும் பெரிய கண் என்க.

( 344 )
2943 காதலங் கழிந்தநா ளிதனி னிப்புற
மேதில மென்றசொற் செவிச்சென் றெய்தலு
மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குநீர்
போதுலா மார்பின்வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே.

   (இ - ள்.) கழிந்த நாள் காதலம் - இறந்த நாட்களில் இல்லறத்தில் அன்புடையேம்; இதனின் இப்புறம் ஏதிலம் என்ற சொல் - அறவுரையைக் கேட்டதற்கு இப்பால் நாம் அயலாரானோம் என்று சீவகன் செப்பிய மொழி; செவிச் சென்று எய்தலும் - காதுகளிற் சென்று வீழ்ந்தவுடன்; மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்கும் நீர் - அரசியரின் மழைத்த மலரனைய பெரிய கண்களில் நிறைந்த நீர்; போது உலாம் மார்பின் வாய்ப