| முத்தி இலம்பகம் | 
1664  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) கோதை மடவார் - மாலையணிந்த அம் மங்கையர்; அழல் ஏந்து வெங்கடுஞ் சொல் - நெருப்பைப் போன்ற மிகவுங் கொடிய ('ஏதிலம்' என்ற) அம் மொழியைக் கேட்ட அளவிலே; உருமேறு உண்டு - இடியேற்றினாலே தாக்கப்பட்டு; நிழல் ஏந்து பூங்கொடிகள் அலர்சிந்தி நிலம் சேர்ந்தாங்கு நிலம் சேர்ந்து - ஒளியேந்திய மலர்க்கொடிகள் (இடி தாக்கி) மலரைச் சிந்தி நிலத்தில் வீழ்ந்தாற்போல நிலமிசை வீழ்ந்து; கழல் ஏந்து சேவடிக் கீழ்க்கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்ப - (சீவகனுடைய) கழல் தாங்கிய சேவடியின் கீழே (கிடந்து) தம் கண்ணீராலாகிய வெள்ளம் ஆங்குள்ள கலங்களிலே நிறைய; குழல் ஏங்குமாறு ஏங்கி அழுதார் - குழல் ஏங்கி அழுவதுபோல ஏங்கி அழுதனர். 
 | 
| 
    (வி - ம்.) அழல் - நெருப்பு. கடுஞ்சொல் என்றது ”இதனின் இப்புறம் ஏதிலம்” எனச் சீவகன் கூறியதனை. ”ஆம்பலங் குழலின் ஏங்கி” (நற்.113) என்றும், ”குழலினைவதுபோல் அழுதனள்” (புறநா.143) என்றும் பிற சான்றோரும் உரைத்தல் காண்க. 
 | 
( 347 ) | 
வேறு
 | 
|  2946 | 
குலிகவஞ் சேற்று ணாறிக் |   |  
|   | 
  குங்கும நீரு ளோங்கிப் |   |  
|   | 
பொலிகென வண்டு பாடப் |   |  
|   | 
  பூத்ததா மரைகள் போலு |   |  
|   | 
மொலிகழ லடிக ணுங்ககீழ்ப் |   |  
|   | 
  பிழைத்ததென் னுரைமி னென்னப் |   |  
|   | 
புலிநிழற் பட்ட மான்போற் |   |  
|   | 
  போழுயி ராகி நின்றார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) குலிக அம் சேற்றுள் நாறி - குலிகத்தின் அழகிய சேற்றிலே முளைத்து; குங்கும நீருள் ஓங்கி - குங்குமம் கலந்த பனிநீரிலே வளர்ந்து; வண்டு பொலிக எனப் பாட - வண்டாகிய பாணர் (பரிசில் பெற விழைந்து) பொலிக என்று பாட; பூத்த தாமரைகள் போலும் ஒலிகழல் அடிகள் - மலர்ந்த தாமரைகளைப் போன்ற ஒலிக்குங் கழல் அணிந்த அடிகளே!; நும் கீழ்ப்பிழைத்தது என் உரைமின் என்ன - உம்மிடத்துப் பிழைத்தது யாது? அதனை உரைமின் என்றுரைத்து; புலிநிழல் பட்ட மான்போல் போகு உயிராகி நின்றார் - புலியினிடம் பட்ட மானின் உயிர்போலப் போதற்குரிய உயிராகி நின்றார். 
 | 
| 
    (வி - ம்.) இனி அரசியர் அவனடி முதலாக முடியளவும் நோக்கி யுரைக்கின்றனர். 
 |