| முத்தி இலம்பகம் |
1665 |
|
|
|
குலிகம் - சாதிலிங்கம். நாறி - முளைத்து. அடிகள் : விளி. புலிநிழல் என்புழி : நிழல் ஏழனுருபின் பொருட்டு. போகுயிர் : வினைத்தொகை.
|
( 348 ) |
| 2947 |
அருந்தவி சாகியெம்மைச் | |
| |
சுமந்தயா வுயிர்த்த வாண்மைப் | |
| |
பெருந்தகு குறங்கு காணீர் | |
| |
பெண்ணுயி ரளிய தாமே | |
| |
வருந்துமா லென்று நோக்கீர் | |
| |
வாடுமா லாவி யென்னீர் | |
| |
விருந்தினர்போல நின்றீர் | |
| |
வெற்றுடல் காண்மி னென்பார். | |
|
|
(இ - ள்.) அருந்தவிசு ஆகி எம்மைச் சுமந்து அயாவுயிர்த்த - (முன்னர்) எமக்கு அரிய இருக்கையாகி எம்மைத் தாங்கி இளைப்பற்றிய; ஆண்மைப் பெருந்தகு குறங்குகாள்! - ஆளுந் தன்மையையுடைய குறங்குகளே!; நீர் பெண் உயிர் அளியதாம் வருந்தும் என்று நோக்கீர் - நீங்கள் பெண்ணுயிர் அருளத் தக்கன, அவை வருந்தும் என்று நினையீராய்; ஆவி வாடும் என்னீர்! - உயிர் வாடும் என்றெண்ணுகிலீராய்; விருந்தினர்போல நின்றீர்! - புதியவர்போல இருக்கின்றீர்; வெற்றுடல் காண்மின் என்பார் - இனி, எம் வெற்றுடலைக் காணுங்கோள் என்பார்கள்.
|
|
(வி - ம்.) தவிசு - இருக்கை. அயாவுயிர்ப்பித்த என்க. அயரவுயிர்த்தல் - இளைப்பாறுதல். குறங்கு - துடை. விருந்தினர் - புதியவர்; ஈண்டு ஏதிலர் என்பதுபட நின்றது. வெற்றுடல் காண்மின் என்றது யாமிறந்து படுதல் ஒருதலை என்பதுபட நின்றது.
|
( 349 ) |
| 2948 |
கோதையுந் துகிலு மேந்திக் | |
| |
குங்கும மெழுதிக் கொய்பூந் | |
| |
தாதுகொண் டளகத் தப்பித் | |
| |
தடமுலை வருடிச் சோ்ந்து | |
| |
காதல்கொண் டிருந்த காமர் | |
| |
கைவிர லளிய நீரு | |
| |
மேதில லாகிக் கோமா | |
| |
னெண்ணமே யெண்ணி னீரே. | |
|
|
(இ - ள்.) கோதையும் துகிலும் ஏந்தி - பூமாலையையும் ஆடையையும் ஏந்தி; குங்குமம் எழுதி - குங்குமச் சாந்தால் எழுதி; கொய்பூந்தாது கொண்டு அளகத்து அப்பி - கொய்த மலர்த்தாதினைக் கொண்டு முன் உச்சி மயிரிலே அப்பி; தட
|