| முத்தி இலம்பகம் |
1668 |
|
|
| 2952 |
அன்னமே தோகை நல்யா |
|
| |
ழமுதமே யாய்ந்த தீந்தே |
|
| |
னின்னரே நங்கை மாரென் |
|
| |
றேத்திய பவளச் செந்நா |
|
| |
வென்னைநீ கண்ட தெம்மை |
|
| |
யிரண்டுநா வாயி னாயே |
|
| |
மன்னன்போ லீர மின்றி |
|
| |
வலித்தனை வாழி யென்பார். |
|
|
(இ - ள்.) அன்னம் தோகை நல்யாழ் அமுதம் ஆய்ந்த தீ தேன் இன்னர் நங்கைமார் என்று - அன்னமும் மயிலும் அழகிய யாழும் அமுதமும் ஆராய்ந்த இனிய தேனும் ஆகிய இத்தன்மையர் நங்கையர் என்று; ஏத்திய பவளம் செந்நா - வாழ்த்திய பவளம்போன்ற செவ்விய நாவே!; எம்மை நீ கண்டது என்னை? - (இப்போது) எம்மிடம் நீ கண்ட குற்றம் என்னையோ?; மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை - அரசனைப்போல அன்பின்றி அழித்துக்கூறத் துணிந்தானை!; இரண்டு நா ஆயினாய் என்பார் - (கூறாயேல்) இரண்டு நாவாக ஆய்விட்டாய் என்பார்.
|
|
(வி - ம்.) இன்னர் - இத்தன்மையர். செந்நா : விளி எம்மை : வேற்றுமை மயக்கம். மன்னர் : சீவகன். வாழி : அசை.
|
( 354 ) |
| 2952 |
பூணினா னெருங்க நொந்து | |
| |
பொதிர்த்தன வெம்பி யென்று | |
| |
நாணினால் வருத்தந் தீர்ப்பா | |
| |
னன்முலைக் கண்க டம்மைப் | |
| |
பேணிநீ ரெழுதி யோம்பிப் | |
| |
பேரின்பங் கொண்டு தந்தீர் | |
| |
காண்மினோ வின்றெம் வண்ணங் | |
| |
கண்ணிலீர் கண்க ளென்பார். | |
|
|
(இ - ள்.) கண்கள் - கண்களே!; பூணினால் நெருங்க வெம்பி நொந்து பொதிர்த்தன என்று - (இவை) பூணுடன் நெருங்குவதாலே வெம்பி நொந்து புடைக்கொண்டன என்று (அரசன்) கருதி; நாணினால் வருத்தம் தீர்ப்பான் - (மேலும் நொய்துற அணிந்த) பொன்னாணால் (அம் முலைகட்குப்) பிறந்த வருத்தத்தை நீக்குதற்கு; நீர் நன்முலைக் கண்கள் தம்மைப் பேணி - நீர் அம் முலைக் கண்களைப் பேணி; எழுதி ஓம்பிப் பேரின்பம் கொண்டு தந்தீர் - எழுதிப் பாதுகாத்துப் பேரின்பங் கொண்டு எமக்கும் அப் பேரின்பம் கொடுத்தீர்; இன்று கண்ணி
|