பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 167 

300 காடுடை யளவை யெல்லாங்
  கழுகிருந் துறங்கு நீழற்
பாடுடை மயிலந் தோகை
  பைப்பய வீழ்ந்த தன்றே

   (இ - ள்.) பாடுஉடை அம் தோகை மயில் - (அங்ஙனம் அவள் மூர்ச்சித்ததால் தானே) இடப்பக்கம் விசை குறைதலால் இறங்கும் மயில்; மோடுஉடை நகரின் நீங்கி - பெருமைமிகும் நகரிலிருந்து நீங்கி; முதுமரம் துவன்றி உள்ளம் பீடு உடைய வரும் உட்கப் பிணம்பல பிறங்கி - முதிய மரங்கள் நெருங்கி, மணவுறுதி யுடையோரும் அஞ்சுமாறு பிணங்கள் பலவாக மிகுத்து; காடுஉடை அளவைஎல்லாம் எங்கும் கழுகு இருந்து உறங்கும் நீழல் - காடிருக்கும் இடம் எல்லாம் எங்கும் கழுகு அமர்ந்து துயிலும் நிழலிலே (சுடுகாட்டில்); பைபய வீழ்ந்தது - மெல்ல மெல்ல விழுந்தது.

 

   (வி - ம்.) பாடு - ஈண்டு இடப்பக்கம். உடைமயில் : உடைகின்ற மயில் என வினைத்தொகை. பொறிக்கு, 'ஓடமுறுக்கி' (சீவக. 238) என்னும் வாசகம் முன்னர் உளது, ஆதலன் அதற்கேற்ப, 'உடைகின்றது' என்றார். கையால் இடந்தரித்தாற் கடிதின் வீழ்கின்றது, ஈண்டுத் தானே இடந்திரிதலிற் பையப்பைய நிலத்திற்கு அண்ணிதாக வீழ்ந்ததென்றார். வீழ்ந்தது, நிகழ்காலத்தில் தோன்றிய இறப்பு.

( 271 )
301 மஞ்சுசூழ் வதனை யொத்துப்
  பிணப்புகை மலிந்து பேயு
மஞ்சுமம் மயானந் தன்னு
  ளகில்வயி றார்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வ தேபோற்
  பல்பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சிமா மஞ்ஞை வீழ்ந்து
  கால்குவித் திருந்த தன்றே.

   (இ - ள்.) மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து - முகில் சூழ்வதுபோலப் பிணப்புகை நிறைந்து; பேயும் அஞ்சும் அம் மயானந் தன்னுள் - பேயும் நடுங்கும் அச் சுடுகாட்டிலே; அகில் வயிறு ஆர்ந்த கோதை பஞ்சிமேல் வீழ்வதேபோல் - அகில் மணத்தைத் தன்னிடத்தே கொண்ட மலர்மாலை பஞ்சியின்மேல் வீழ்வதைப்போல; பல்பொறிக் குடுமிநெற்றிக் குஞ்சி மாமஞ்ஞை - பல புள்ளிகளையும் உச்சியிலே கொண்டையையும் மயிரையும் உடைய பெரிய மயில்; வீழ்ந்து கால்குவித்து இருந்தது - மெல்லென விழுந்து காலைக் குவித்திருந்தது.