பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1671 

   கொல் இரண்டும் ஐயப்பொருளன. கண்ணார் - கண்ணுக்கு நிறைந்த. கழி : மிகுதிப்பொருட்டு. எண்ணாய - எண்ணுதற்குக் காரணமான. ஏம் - மயக்கம். பண் - யாழிற்கு ஆகுபெயர்.

( 358 )
 

   (இ - ள்.) கொல் வேல் நெடுங்கண் குணமாலை - கொல் வேலனைய நீண்ட கண்களையுடைய குணமாலை; அன்று குஞ்சரத்தால் அல்லல் நோய் உற்றாளுக்கு - அன்று அசனிவேகம் என்னும் களிற்றால் வருத்தமுற்றபோது அவளுக்கு; களிறு அடர்த்து - அந்த யானையை வருத்தி; புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின்மேல் உறைந்தாய் - அவளைத் தழுவி அவளுடைய இருமுலைகளாகிய அழகிய மலைகளின்மேற் பயின்றாய்; மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் எல்லே இன்னாளோ! - இனி, எம் பெருமானே! நினக்கு இன்று இவளும் வெளியாகத் தீயவளோ?

   (வி - ம்.) இதனாற் குணமாலையைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது

   கொல்வேல் : வினைத்தொகை. குஞ்சரம் - ஈண்டு அசனிவேகம். குஞ்சரத்தால் நோயுற்ற குணமாலைக்கு என்றவாறு. அக்களிறடர்த்து என்க. எல்லே - வெளியாக. இன்னாள் - தீயவள்.

( 359 )
2958 தூம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தியழ னாகப்
  பாம்புடைய நோக்கிப் பதுமை பவழவாய்
தேம்புடைய வின்னமுதாச் சோ்ந்தாய்க் கினியதுவே
  யாம்புடைய நஞ்சடங்கிற் றின்றூறிற் றாகாதே.
கொல்வே னெடுங்கட் குணமாலை குஞ்சரத்தா
  லல்லனோ யுற்றாளுக் கன்று களிறடர்த்துப்
புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தா
  யெல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ.

   (இ - ள்.) தூம்புடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்பாம்பு உடைய நோக்கி - புரை பொருந்திய வெள்ளெயிற்றினையும், பொறியினையும், நஞ்சினையும் உடைய நாகப்பாம்பின் நஞ்சு நீங்கப் பார்த்து ; பதுமை பவளவாய் தேம்புடைய இன்அமுதாச் சேர்ந்தாய்க்கு - பதுமையின் பவளமனைய வாயினை இனிய அமுதாகக் கொண்டு கூடிய நினக்கு; இனி ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று, இன்று ஊறிற்று ஆகாதே - மேல் வளருங் கூற்றினையுடைய நஞ்சு ஒருபுறத்தே அடங்கித் தீராமல் நின்றது; அதுவே இன்று ஊறியதாகாதோ?

   (வி - ம்.) தேம்புதலையுடைய பதுமை எனினும் ஆம். இதனாற் பதுமையைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது.