| முத்தி இலம்பகம் | 
1672  | 
 | 
  | 
| 
    தூம்பு - துளை. துத்தி - படத்தின் கட்பொறி. பாம்பு - நஞ்சிற்கு ஆகுபெயர். தேம்பு - தேம்புதல். ஆம்புடைய - ஆகும் திறத்தையுடைய. பாம்பின் நஞ்சுதீர்த்து உய்யக்கொண்ட நீயே நின்பிரிவாகிய நஞ்சாலே கொல்வாயோ என்பது கருத்து. 
 | 
( 360 ) | 
|  2959 | 
தாழ்ந்துலவி மென்முலைமேற் றண்ணாரம் வில்விலங்கப் |   |  
|   | 
போழ்ந்தகன்ற கண்ணினா லேப்பெற்றுப் போகலாய் |   |  
|   | 
தாழ்ந்தமர ரின்னமிர்தந் தக்கநாட் டாகாதே |   |  
|   | 
வீழ்ந்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மென்முலைமேல் தண் ஆரம் தாழ்ந்து உலவி - மென்மையான முலைகளின்மேல் தண்ணிய முத்துமாலை தங்கி உலவி; வில்விலங்க - ஒளியைக் குறுக்கே வீச; அகன்ற கண்ணினால் போழ்ந்து ஏப்பெற்றுப் போகலாய் - மலர்ந்த விழியினால் (நின் நெஞ்சைப்) பிளக்க எய்த அம்பைப் பெற்றுப் போக மாட்டாயாய்; அமரர் இன் அமிர்தம் ஆகாதே தக்கநாட்டு வீழ்ந்தது என - வானவர் கொண்டுபோகும் அமிர்தம் அவர்கட்கு ஆகாமல் தக்கநாட்டிலே வீழ்ந்தது என்று கருதி; வீழ்ந்தாய் - விரும்பினாய்; இன்று அதுவும் நீ விட்டாயோ? - நீ இன்று அவ்விருப்பத்தையும் விட்டாயோ? 
 | 
| 
    (வி - ம்.) இதனாற் கேமசரியைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது. 
 | 
| 
    ஆரம் - முத்துமாலை. வில் - ஒளி. போழ்ந்து - போழ. ஏ - அம்பு. வீழ்ந்தாய் - விரும்பினாய். அது அவ்விருப்பம். 
 | 
( 361 ) | 
|  2960 | 
கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ |   |  
|   | 
பெண்ணோ வமுதோ பிணையோ வெனப்பிதற்றித் |   |  
|   | 
துண்ணென் சிலைத்தொழிலுங் காட்டிமுன் னின்புற்றீர் |   |  
|   | 
புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பெண்ணோ அமுதோ பிணையோ - இவள் பெண்ணோ? அமுதமோ? மான்பிணையோ?; கண்ணோ கயலோ கழுநீரோ? காவியோ எனப் பிதற்றி - இவள் முகத்தில் உள்ளவை கண்ணோ? கயல்மீனோ? கழுநீர் மலரோ? குவளை மலரோ? என்று புனைந்துரைத்து; துண் என் சிலைத்தொழிலும் காட்டி - (இவள் பொருட்டு இவளைப் பெறுவதற்குமுன்) அஞ்சத்தக்க விற் பயிற்சியையுங் காட்டி; முன் இன்பு உற்றீர் - முன் இன்பம் அடைந்தீர்; புண்மேல் கிழிபோல துறத்தல் பொருளாமோ? - நீர் இக்காலத்துப் புண்ணிற்கிடந்த துணிபோல் துறத்தல் அறம் ஆமோ? 
 | 
| 
    (வி - ம்.) விற்பயிற்சியைக் காட்டியது கனகமாலையை மணப்பதற்குமுன் என்றும் மணந்ததற்பின்னர்ப் பாராட்டினான் என்றுங் 
 |