| முத்தி இலம்பகம் | 
1676  | 
 | 
  | 
வேறு
 | 
|  2967 | 
பண்ணார் பணைமுழவம் பாடவிந்து |   |  
|   | 
  பன்மணியாழ் மழலை நீங்கிப் |   |  
|   | 
புண்ணார் புனைகுழலு மேங்கா |   |  
|   | 
  புனைபாண்டி லிரங்கா வான்பூங் |   |  
|   | 
கண்ணா ரொலிகவுள கிண்கிணியு |   |  
|   | 
  மஞ்சிலம்புங் கலையு மாரா |   |  
|   | 
மண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக் |   |  
|   | 
  கோன்கோயின் மடிந்த தன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வான்பூங் கண்ணார் - சிறந்த மலர்போலுங் கண்ணாருடைய; பண் ஆர் பணைமுழவம் பாடு அவிந்து - இசைக்குரிய பருத்த முழவுகள் ஒலிகெட்டு; பல் மணியாழ் மழலை நீங்கி - பல மணிகளிழைத்த யாழின் ஒலி கெட்டு; புண் ஆர் புனை குழலும் ஏங்கா - துளை பொருந்திய அழகிய குழலும் ஒலியா; புனை பாண்டில் இரங்கா - அழகிய கஞ்சதாளமும் ஒலியா; ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா - ஒலிக்கும் பக்கத்தையுடைய கிண்கிணியும் அழகிய சிலம்பும் கலையும் ஒலியா; மண ஆர் வலம்புரியும் வாய் மங்கி - அரக்கிட்டாடின வலம்புரியும் ஒலியவிந்து; கோன் கோயில் மடிந்தது - அரசன் கோயில் ஆரவாரம் அற்றது. 
 | 
| 
    (வி - ம்.) 'மண்ணார் கோன்' எனச் சேர்க்கலாம் என்றும், 'பூங்க கண்ணார் மழலை நீங்கி' என இயைத்துங் கூறுவர் நச்சினார்க்கினியர். 
 | 
( 369 ) | 
|  2968 | 
அணியார் மணியரக்கு வட்டழுத்தி |   |  
|   | 
  வைத்தனைய செங்கண் மாத்தாட் |   |  
|   | 
பிணியார் பெருந்துருத்தி யன்ன |   |  
|   | 
  பெருங்கடவுள பிறையோ் கோட்ட |   |  
|   | 
பணியார் கமழ்கடாத் தண்ண |   |  
|   | 
  லரசுவாப் பண்ணார் பாய்மா |   |  
|   | 
விணையாது மில்லாத கண்ணீர்வீழ்த் |   |  
|   | 
  துண்ணாநின் றினைந்த தாமே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அணியார் மணி, அரக்கு வட்டு அழுத்திவைத்த அனைய செங்கண் - அழகிய மணியினையும், சிவந்த எஃகுருண்டையை அழுத்தி வைத்தால் அனைய சிவந்த கண்களையும்; மாத்தாள் - பெரிய கால்களையும்; பிணியார் பெருந்துருத்தி அன்ன பெருங்கவுள - பிணிப்புற்ற பெரிய துருத்திபோன்ற பெரிய 
 |