முத்தி இலம்பகம் |
1677 |
|
|
கவுள்களையும் உடையனவாய்; பிறை ஏர் கோட்ட - பிறை போன்ற அழகிய கோடுகளையுடையனவாய்; பணி ஆர் கமழ் கடாத்து - வண்டுகள் படிய நிறைந்த மணமுறும் மதத்தினையுடையவாய் (உள்ள); அண்ணல் அரசு உவா - அரசனுடைய பட்டத்து யானைகளும்; இணையாதும் இல்லாத - தமக்குவமை யாதும் இல்லாத; பண் ஆர் பாய்மா - பண்ணுதல் அமைந்த குதிரைகளும்; தாமே கண்ணீர் வீழ்த்து உண்ணா நின்று இனைந்த - தாமே (அரசன் துறவுணர்ந்து) கண்ணீரை விடுத்து உண்ணாமல் நின்று வருந்தின
|
(வி - ம்.) மணியினையும் கண்ணையும் தாளையும் உடைய அரசுவா, கவுளவும் கோட்டவும் ஆகிய அரசுவா, கடாத்து அண்ணல் அரசுவா எனத் தனித்தனி கூட்டுக. அரசுவா - பட்டத்துயானை. பாய்மா - குதிரை. இணையாதுமில்லாத பண்ணார் பாய்மா என இயைக்க. இனைந்த - வருந்தின. தாமே இனைந்த என மாறுக.
|
( 370 ) |
2969 |
கழித்த கடிப்பிணையுங் கைவளையு | |
|
மாலையுங் களைந்து முத்துந் | |
|
தொழித்த நறுஞ்சாந்துஞ் சுண்ணமும் | |
|
பன்மணியுங் கலனுஞ் சிந்தி | |
|
விழித்து வியன்கோயில் பன்மீன் | |
|
பரந்திமைக்கும் பனியார் வானம் | |
|
பழித்துப் பசும்பொன் னுலகு | |
|
குடிபோயிற் றொத்த தன்றே. | |
|
(இ - ள்.) களைந்து கழித்த கடிப்பிணையும் கைவளையும் மாலையும் முத்தும் - வாங்கிப் போடப்பட்ட கடிப்பிணை என்னும் காதணியும் கைவளையலும் மாலையும் முத்தும்; தொழித்த கலனும் - ஒலித்த கலனும்; நறுஞ்சாந்தும் சுண்ணமும் பல்மணியும் சிந்தி - நல்ல சந்தனமும் சுண்ணப்பொடியும் அளைந்த பல்வகை மணிகளும் சிந்தி; விழித்து - விளங்கியதனால்; வியன் கோயில் - பெரிய அரண்மனை; பன் மீன் பரந்து இமைக்கும் பனி ஆர் வானம் பழித்து - பல விண்மீன்கள் பரவி ஒளிரும் குளிர்ந்த வானத்தைப் பழித்து; பசும்பொன் உலகு குடிபோயிற்று ஒத்தது - பொன்னுலகு குடிபோயிற்றுப் போன்றது.
|
(வி - ம்.) 'களைந்த முத்தும்' என்றும் பாடம் .
|
கடிப்பிணை - ஓர் அணிகலன். தொழித்த - ஒலித்த. சாந்தும் சுண்ணமும் அளைந்த மணியென்க. விழித்து - விழிப்ப - விளங்குதலான் என்க. தொழித்த கலன் என ஒட்டுக. பனி - குளிர். பனியுமாம். ஆற்றொணாத் துன்ப மேலீட்டால் வெறுத்துச் சிந்திய கலன்கள் விண்மீனை யொத்தன.
|
( 371 ) |