| முத்தி இலம்பகம் |
1678 |
|
|
| 2970 |
அழலார் சுரையெயிற்று வெஞ்சினவைந் | |
| |
தலைசுமந்த வெகுளி நாக | |
| |
நிழலார் திருமணியுந் தேவர் | |
| |
திருமுடிமே னிலவி வீசுஞ் | |
| |
சுழலார் பசும்பொன்னும் வேய்ந்து | |
| |
சொரிகதிர்மென் பஞ்சி யார்ந்த | |
| |
கழலா னகர மமுது | |
| |
கடைகடல்போற் கலங்கிற் றன்றே. | |
|
|
(இ - ள்.) அழல் ஆர் சுரை எயிற்று வெஞ்சின வெகுளி நாகம் - நஞ்சு பொருந்திய குழல்போன்ற பற்களையும் வெஞ்சின வெகுளியையும் உடைய நாகத்தின், ஐந்தலை சுமந்த நிழல் ஆர் திருமணியும் - ஐந்தலையிலே சுமந்த, ஒளி நிறைந்த அழகிய மணியும், தேவர் திருமுடிமேல் நிலவி வீசும் சுழல் ஆர் பசும்பொன்னும் - (இனி வணங்கும்) வானவர் திருமுடிமேல் விளங்கி வீசும் சுழலும் ஒளியுடைய புதிய பொன்னணியும்; வேய்ந்து - அணிந்து; கதிர் சொரி மென் பஞ்சி ஆர்ந்த கழலான் - ஒளி வீசும் மென்மையான பஞ்சுபோல் மென்மை நிறைந்த கழலானின்; நகரம் அமுது கடை கடல்போல் கலங்கிற்று - நகரம் அமுது கடையுங் கடல்போலக் கலங்கியது.
|
|
(வி - ம்.) வானவர் வணங்குதல், இனிமேல் சீவகனடையும் சிறப்பு, 'சுழலார் வானவர்' எனக்கூட்டி 'வலம்வரும் வானவர்' எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 372 ) |
25.நகர விலாவணை
|
வேறு
|
| 2971 |
நீர்நிறை குளத்து மாரி | |
| |
சொரிந்தென நறுநெய் துள்ளு | |
| |
நோ்நிறை பொரியுங் குய்யும் | |
| |
வறைகளு நிவந்த வாசம் | |
| |
பார்நிறை யடிசிற் பள்ளி | |
| |
தளியொடு சாலை யெல்லா | |
| |
மூர்நிறை யுயிர்த்த லின்றி | |
| |
யுயிர்சென்ற போன்ற வன்றே. | |
|
|
(இ - ள்.) பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம் - உலகு நிறைந்த புகழையுடைய அட்டில்களிலும் கோயில்களிலும் சோறிடுஞ் சாலைகளிலும் ஆக எங்கும்; நீர் நிறை
|