| முத்தி இலம்பகம் |
1679 |
|
|
|
குளத்து மாரி சொரிந்தென - நீர்நிறைந்த குளத்திலே மழை பெய்ததென்னும்படி; நறு நெய் துள்ளும் நேர்நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம் - நல்ல நெய்யிலே துள்ளுமாறு பொரித்த ஒழுங்காக நிறைந்த பொரிக்கறிகளும் கொண்டபடி உயர்ந்த மணம்; ஊர் நிறை உயிர்த்தல் இன்றி - ஊர் நிறையும் தோன்றுதலின்றாய்; உயிர் சென்ற போன்ற - உயிர் நீங்கியவை போன்றன.
|
|
(வி - ம்.) குளத்திலே மழைபெய்த தென்னும்படி நறுநெய்யிற்றுள்ளும்படி பொரித்த பொரிக்கறி. பல காயங்கள் குறிக்கு நேராக நிறைந்த பொரிக்கறி. குய் - தாளிக்குங் கறி. வறைகள் - துவட்டின கறிகள்; வறுவல். பாரிலே நிறைந்த புகழினையுடைய ஊர் என்க.
|
( 373 ) |
| 2972 |
கோட்புலிச் சுழல்கண் ணன்ன | |
| |
கொழுஞ்சுவைக் கருனை முல்லை | |
| |
மோட்டிள முகையின் மொய்கொள் | |
| |
கொக்குகிர் நிமிரல் வெண்சோ | |
| |
றூட்டுறு கறிகொ டேமாங் | |
| |
கனிசுவைத் தயிரோ டேந்தி | |
| |
வேட்டவர்ப் பெறாது வீதி | |
| |
வெறுநிலங் கிடந்த வன்றே. | |
|
|
(இ - ள்.) மோட்டு இளமுல்லை முகையின் மொய்கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு - உயர்ந்த இளமை பொருந்திய முல்லையரும்பைப் போலத் திரட்சி கொண்ட, கொக்கின் நகம் போன்ற நீண்ட வெண்சோறும்; கொள்புலிச் சுழல்கண் அன்ன கொழுஞ்சுவைக் கருனை - கொல்லும் புலியின் சுழல்கண் போன்ற நறுஞ்சுவையுடைய கருனைக்கிழங்கும்; ஊட்டுறு கறி - உண்ணப்பண்ணும் கறியும்; தேமா கொள் கனி - தேமாவிற் கொண்ட கனியும்; சுவைத் தயிரொடு ஏந்தி - இனிமையுடைய தயிரையும் ஏந்தியவாறு; வேட்டவர்ப் பெறாது - விரும்பி யுண்போரைக் காணாமல்; வீதி வெறுநிலம் கிடந்த - தெருக்கள் வெறு நிலமாய்க் கிடந்தன.
|
|
(வி - ம்.) புலிக்கண் பொரிக்கறிக்குவமை. ”புல்லிக்கண் வெப்பர்” என்பர் புறத்தில், (269). முல்லை முகையின் மொய்கொள் வெண்சோறு கொக்கு உகிர் நிமிரல் வெண்சோறு எனத் தனித்தனி கூட்டுக. முல்லை முகை திரட்சிக்கும் கொக்குகிர் நீட்சிக்கும் உவமைகள். வேட்டவர் - விரும்புவார். அறம் நிகழும் வீதிகள் வறிதே கிடந்தன என்றவாறு. மன்னன் துறக்கவே வாழும் மாந்தரும் மனம் மாழ்கினராய் ஊண் துறந்து உரைக்கவொண்ணா உறுதுயர் உற்றமை காண்க.
|
( 374 ) |