பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 168 

   (வி - ம்.) பேயும்: உம் : உயர்வு சிறப்பு. அகில் : அதன் மணத்திற்கு ஆகுபெயர்.

 

   'இருக்கும்' என்றும் பாடம். இம் மயிற்பொறியைக் கூனியது உருவங்கொண்ட தெய்வம் மறைத்துக் கட்டியங்காரனும் கோவிந்தனும் தேவியைத் தேடாமற் காத்ததென்று கொள்க. அது பின்பு, 'கனியார் மொழியாட்கும் மயிற்குங் காமர்பதி நல்கி' (சீவக. 2603) எனச் சேரக் கூறியவாற்றானும் உணர்க.

( 272 )
302 வார்தரு தடங்க ணீர்தன்
  வனமுலை நனைப்ப வேல்பெற்
றூர்கட லனைய காட்டு
  ளச்சமொன் றானு முள்ளா
ளோ்தரு மயிலஞ் சாய
  லிறைவனுக் கிரங்கி யேங்கிச்
சோர்துகி றிருத்த றேற்றா
  டுணைபிரி மகன்றி லொத்தாள்.

   (இ - ள்.) ஏர்தரும் மயில்அம் சாயல் - எழுச்சிபெறும் அழகிய மயிலனைய மென்மையுடையாள்; தடம்கண் வார்தரும் நீர்தன் வனமுலை நனைப்ப - பெரிய கண்களிலிருந்து வழிதரும் நீர் தன் அழகிய முலைகளை நனைக்க; ஏல்பெற்று - மனவெழுச்சி மிக்கு; ஊர்கடல் அனைய காட்டுள் - பரவிய கடல்போன்ற அக்காட்டிலே; அச்சம் ஒன்றானும் உள்ளாள் - பேய் முதலிய ஒரு வகையானும் அச்சங்கொள்ளாதவளாய்; இறைவனுக்கு இரங்கி ஏங்கி - அரசன் நிலைக்கு யாது செய்வேன் என்று வருந்தி யழுது; சோர்துகில் திருத்தல் தேற்றாள் - சோரும் ஆடையையுந் திருத்தும் தெளிவில்லா தவளாய்; துணைபிரி மகன்றில் ஒத்தாள் - துணையைப் பிரிந்த மகன்றிலைப் போன்றாள்.

 

   (வி - ம்.) உள்ளாள், தேற்றாள்: முற்றெச்சங்கள். அன்பு மிகுதியாற் கையாறு முற்படுதலின், 'இறுகி' (சீவக. 299) எனக் கையாறு கூறி, 'இரங்கி' எனக் கவலை கூறி, 'ஏங்கி' என அரற்றுக் கூறி, 'அச்சம் உள்ளாள்' என அவலங் கூறினார். வருத்தம் தோன்றி நிற்றல், அவலம் வாய்விட்டழுதல், அரற்று. யாது செய்வல் என்றல், கவலை. மூர்ச்சித்தல், கையாறு.

 

   ஏல் - மனவெழுச்சி. தான் நிற்கின்ற நிலையிலே கலக்கத்தாலே பேய் முதலியவற்றிற்குச் சிறிதும் அஞ்சினாளிலன்.

( 273 )
303 உண்டென வுரையிற் கேட்பா
  ருயிருறு பாவ மெல்லாங்
கண்டினித் தெளிக வென்று
  காட்டுவாள் போல வாகி