| முத்தி இலம்பகம் |
1680 |
|
|
| 2973 |
மைந்தர்தம் வண்கை யான்முன் | |
| |
மணிவள்ளத் தெடுத்த தேறல் | |
| |
பைந்துகின் மகளிர் மேவார் | |
| |
பாசிழை பசும்பொன் மாலை | |
| |
சிந்தியே கரந்தார் சொற்போன் | |
| |
மெய்யின்கட் சோ்த லின்றாய்ச் | |
| |
சந்தனச் சாந்தொ டாரந் | |
| |
தாங்கவி னிழந்த வன்றே. | |
|
|
(இ - ள்.) மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து கையால் எடுத்த தேறல் - ஆடவர்கள் தம் வளவிய கையால் முன்னர் மணிகள் இழைத்த கிண்ணத்திலே எடுத்த மதுத் தெளிவை; பைந்துகில் மகளிர் மேவார் - (இன்று) புத்தாடையணிந்த பெண்கள் விரும்பாராயினர்; பாசிழை பசும் பொன் மாலை சிந்தி - புத்தணிகளையும் புதிய பொன் மாலைகளையும் சிந்த; கரந்தார் சொல்போல் மெய்யின் கண் சேறல் இன்றாய் - போலித் துறவிகளின் சொற்களைப்போல மெய்யிலே அடைதல் இல்லாமல்; சந்தனச்சாந்தொடு ஆரம் - சந்தனக் குழம்புடனும் முத்துமாலையுடனும்; தாம் கவின் இழந்த - தாமும் அழகிழந்தன.
|
|
(வி - ம்.) போலித் துறவிகளின் சொல் பற்றுவிடாதிருக்கவும் பற்றற்றன போன்றிருக்குமாறுபோல, அவர்கட்குப் பற்றிருப்பினும் அரசன் துறவால் பற்றற்றவர்போன்று மேவாதிருந்தனர். மெய் - உண்மை உடம்பு.
|
( 375 ) |
| 2974 |
தாழிவாய் மறைக்குந் தண்ணென் | |
| |
றடம்பெருங் குவளைக் கண்ணார் | |
| |
மூழிவாய் முல்லை மாலை | |
| |
முலைமுக முரிந்து நக்க | |
| |
யாழின்வாய் முழவம் விம்ம | |
| |
வாட்டொழிந் தயர்ந்து தீந்தே | |
| |
னூழிவாய்க் கொண்ட தொக்கும் | |
| |
பாடலு மொழிந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெருங்குவளைக் கண்ணார் - தாழியின் வாயை மறைக்கும் தண்ணெனும் பொய்கையிலுள்ள குவளைபோலும் கண்ணார்; மூழிவாய் முல்லைமாலை முலைமுகம் முரிந்து நக்க - பெட்டியில் இருந்தெடுத்த முல்லை மலர் மாலை முலைமுகத்திலே நுடங்கித் தடவ; யாழின
|