| முத்தி இலம்பகம் |
1682 |
|
|
|
(இ - ள்.) கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல்விளை அமுதம் அன்னார் - கலை பொருந்தி நிமிர்ந்த அல்குலையுடைய, கடலில் விளையும் - அமுதம்போன்ற மகளிரின்; முலை உலாய் நிமிர்ந்த மொய்தார் - முலைகளில் உலவி நிமிர்ந்த திரண்ட மலர் மாலையும்; முழவு முத்து உரிஞ்சி மின்னச் சிலைஉலாய் நிமிர்ந்த மார்பன் - முழவு போல் திரண்ட முத்துமாலையும் பொருந்தி மின்னும்படி, வில் உலாவி நிமிர்ந்த மார்பனுடைய; திருநகர் - அழகிய இராசமாபுரம்; தெருள்கலாதாய் - தெளிவடையாத தாய்; உலகின் தன்மை நிலை இலா நீர்மை மீக்கூறிற்று - உலகின் இயற்கை நிலையில்லாத நீர்மையாக இருக்கும் என்று மேலாகக் கூறிற்று.
|
|
(வி - ம்.) கலை - மேகலை. முழவுமுத்து - உவமத்தொகை. சிலை - வில். மார்பன் : சீவகன். நகா ்- ஈண்டு. இராசமாபுரம். உலகின் தன்மை நிலையிலா நீர்மை என இயைக்க.
|
( 378 ) |
வேறு
|
| 2977 |
கூந்த லகிற்புகையும் வேள்விக் கொழும்புகையு | |
| |
மேந்து துகிற்புகையு மாலைக் கிடும்புகையு | |
| |
மாய்ந்த பொருளொருவர்க் கீயா வதிலோப | |
| |
மாந்தர் புகழேபோற் றோன்றா மறைந்தனவே. | |
| |
|
|
(இ - ள்.) கூந்தல் அகில் புகையும் - கூந்தலுக்கிடும் அகிற்புகையும்; வேள்விக் கொழும் புகையும் - வேள்ளியில் எழும் மிக்க புகையும்; துகில் ஏந்து புகையும் - ஆடைக்கு ஏந்தும் புகையும்; மாலைக்கு இடும் புகையும் - மாலைக்கு இட்ட புகையும்; ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோ மாந்தர் புகழேபோல் - நல்ல பொருளை ஒருவர்க்கு நல்காத கொடிய லோபிகளின் புகழ்போல; தோன்றா மறைந்தன - தோன்றாமல் மறைந்தன.
|
|
(வி - ம்.) கூந்தலுக்கிடும் புகை; துகிற்கிடும் புகை : மாலைக்கிடும் புகை என இடும் என்னும் சொல்லை ஏனையவற்றோடும் கூட்டுக. உலோபம் - இவறுதல்; ஈயாமை. துவரமறைந்தன என்பார் தோன்றா மறைந்தன என்றார்.
|
( 379 ) |
| 2978 |
புல்லுண் புரவி புலம்பு விடுகுரல்போ | |
| |
னல்லவளை போழரவ நாரை நரல்குரல்போற் | |
| |
கல்லா விளையர் கலங்காச் சிரிப்பொலியுங் | |
| |
கொல்யானைச் சங்கொலியுங் கூடா தொழிந்தனவே. | |
| |
|
|
(இ - ள்.) புல் உண் புரவி புலம்பு விடுகுரல்போல் - புல்லைத்தின்னுங் குதிரை சோம்பு போக்கும்போது எழும் ஒலி
|