| முத்தி இலம்பகம் |
1684 |
|
|
|
னும்; நடு இருள்கண் காம்பு ஆர் காடே போல் ஆயிற்று - நள்ளிருளிலே நின்ற முள்ளுடைய மூங்கில் நிறைந்த காடே போல் (நகரம்) ஆயிற்று.
|
|
(வி - ம்.) அவற்றிற்கும் அவர்க்கும் ஆயிற்று. அரசன் துறவினை நகர மக்களும் உட்கொண்டமையின் நுகரப்படும் பொருள்கள்மேல் நிகழும் பகுதியையுடைய மொழிகள் மீண்டன : அப்பொருள்களிற் பற்றின்மையின் யாரும் பிறர் பிறராயினர்.
|
|
காடேபோல் என்பதனாற் பயன்:- இவ்வூரிற் பெற்ற செல்வந்தன்னையே நுகர்ந்தாற் பின்னும் மயக்கஞ்செய்யும் பிறவியாகிய இருளைப் பிறப்பித்தலும், முட்போலப் பற்றினால் தொடக்கிக்கொள்ளலும், வீட்டுப் பயன் கொடாமையுமாம், ஆதலின்; துறவுள்ளம் பிறந்தோர்க்கு இத்தன்மைத்தான நகரி காடுபோலாயிற்று; கிளிக்கும் வானவர்க்கும் களிற்றிற்கும் பொருள்களின் நுகர்ச்சியின்மையின் காடு போலாயிற்று.
|
( 382 ) |
| 2981 |
நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத் | |
| |
தோ்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் | |
| |
பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந் | |
| |
தூர்முழுது நாடு முரவோன்றாள் சோ்ந்தனவே. | |
| |
|
|
(இ - ள்.) நீர் முழங்கும் நீலம் நெடுமேகம் மால் யானைத் தேர் முழங்கு தானை - நீரினையுடைய முழங்கும் கரிய பெரிய முகில்போலும் பெரிய யானையும் தேரும் முழங்கும் படையையுடைய, திருமாலின் முன் துறப்பான் - அரசனுக்கு முன்னே துறப்பதற்கு; பார் முழங்கு தெண்திரை போல் செல்வம் தம் பாலற்கு ஈந்து - உலகில் முழங்கும் தௌ்ளிய அலைகடல் போன்ற செல்வத்தைத் தம் மக்களுக்கு நல்கிவிட்டு; ஊர் நாடு முழதும் - ஊரில் உள்ளாரும் நாட்டிலுள்ளாரும்; உரவோன்தாள் சேர்ந்தன - அறிவுடைய அரசன் அடியை அடைந்தனர்.
|
|
(வி - ம்.) காத்தற்றொழிலால் அரசன் திருமாலாயினன்.
|
|
நீரினையுடைய மேகம்; முழங்கு மேகம்; நீலமேகம்; நெடுமேகம் எனத் தனித்தனி கூட்டுக. திருமால் என்றது சீவகனை. துறப்பான் - துறத்தற்கு. நாடும் ஊரும் ஆகுபெயர்கள்.
|
( 383 ) |
26 துறவு வலியுறுத்தல்
|
வேறு
|
| 2982 |
கொல்லுலைப் பொங்கழற் கிடந்த கூரிலை | |
| |
மல்லல்வே லிரண்டொரு மதியுள் வைத்தபோற் | |
| |
செல்லநீண் டகன்றகஞ் சிவந்த கண்ணினா | |
| |
ரல்லலுற் றழுபவர்க் கரசன் சொல்லினான். | |
| |
|