பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 169 

303 விண்டொட நிவந்த கோயில்
  விண்ணவர் மகளிற் சென்றாள்
வெண்டலை பயின்ற காட்டுள்
  விளங்கிழை தமிய ளானாள்.

   (இ - ள்.) விளங்குஇழை விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள் - விளக்கமான அணிகளை அணிந்த விசயை, வானளாவ உயர்ந்த அரன்மனையிலே வானவர் மகளைப் போல நல்வினை வடிவாய் உலவினள்; உயிர்உறு பாவம் எல்லாம் உண்டுஎன உரையில் கேட்பார் - பல உயிர்களும் உறும் பாவங்களெல்லாம் இவை என்று நூல்களிலே உரையளவிலே உள்ளன என்று கேட்பவர்கள்; கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி - நேரிற் பார்த்து இனித் தெளிவுறுக என்று உலகிற்குக் காட்டுகின்றவள் போலவாகி; வெண்தலை பயின்ற காட்டுள் தமியள் ஆனாள் - மண்டையோடுகள் பழகிய சுடுகாட்டிலே தீவினையின் வடிவாய்த் தனித்தவளானாள்.

 

   (வி - ம்.) மகப்பெறுங் காலத்துத் துணையின்றி வருந்துதலின், 'காட்டுவாள்போல ஆகி ' என்றார்.

 

   உரை - ஆகம அளவை. கண்டினித் தெளிக என்றது காட்சியளவையானும் கண்டு உணர்வீராக என்றவாறு.

 

   இவள் நெருநல் விண்டொட நிவந்த கோயில் விண்ணவர் மகளிற் சென்றாள் இன்று தமியளானாள் என்க.

( 274 )
304 இருள்கெட விகலி யெங்கு
  மணிவிளக் கெரிய வேந்தி
யருளுடை மனத்த வாகி
  யணங்கெலாம் வணங்கி நிற்பப்
பொருகடற் பருதி போலப்
  பொன்னனான் பிறந்த போழ்தே
மருளுடை மாத ருற்ற
  மம்மர்நோய் மறைந்த தன்றே

   (இ - ள்.) எங்கும் இருள்கெட இகலி மணிவிளக்கு ஏந்தி எரிய - அவ்விடத்தும் இருள்இன்றி ஓட்டி மணிவிளக்குகள் மிக்குச் சுடர்வீச; அணங்கு எலாம் அருள்உடை மனத்தஆகி வணங்கி நிற்ப - ஆண்டுறையும் தெய்வமெல்லாம் (இவன் பின்னர் வீடு பெறுவான் என்று கருதி) இரக்கமுற்ற வுள்ளத்துடன் வணங்கி நிற்க; பொருகடல் பருதிபோலப் பொன்னனான் பிறந்த போதே - அலைகடலிடை ஞாயிறுபோலப் பெறுதற்கரியவன்