பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1690 

   நுகர்ச்சியைக் கைவிட்டேமாதலின், இனி எமக்கு நுகர்ச்சி இன்றென்றவாறு

( 391 )

வேறு

2990 சாந்தங் கிழிய முயங்கித் தடமலராற்
கூந்தல் வழிபட்ட கோவேநீ செல்லுலகில்
வாய்ந்தடியேம் வந்துன் வழிபடுநா ளின்றேபோற்
காய்ந்தருளல் கண்டா யெனத்தொழுதார் காரிகையார்.

   (இ - ள்.) சாந்தம் கிழிய முயங்கித் தடமலரால் கூந்தல் வழிபட்ட கோவே! - மார்பிற் பூசிய கலவைச் சந்தனம் அழியத் தழுவி, பெரிய மலர்களைக் கொண்டு கூந்தலை வழிபட்ட அரசே!; நீ செல் உலகில் அடியேம் வந்து வாய்ந்து உன் வழிபடும் நாள் - நீ செல்லும் வீட்டுலக்கின்கண்ணே அடியேமும் வந்து பொருந்தி நின்னை வழிபடும்போது; இன்றேபோல் காய்ந்தருளல் என - இன்று வெறுத்தாற்போல வெறாதே என்று; காரிகையார் கை தொழுதார் - அரசியர் கைகூப்பித் தொழுதனர்.

   (வி - ம்.) முயக்கத்தால் வருத்தம் நிகழ்ந்ததாகக் கருதி, மலராற் கூந்தலை வழிபட்டு வருத்தந் தீர்த்த கோவே என்றது, எமக்கு வருத்தம் இல்லதனை வருத்தமாகக் கொண்ட நீ ஈண்டு வருத்தமுள்ளதனைத் தீர்க்கின்றிலை என்றதாம். வாய்ந்து - வீடுபெறுதற்குரிய தவங்கள் எமக்கு வாய்த்து என்றுமாம்.

( 392 )

27.தேவிமார் துறவு

வேறு

2991 தெண்டிரை நீத்த நீந்தித்
  தீங்கதிர் சுமந்து திங்கள்
விண்படர்ந் தனைய மாலை
  வெண்குடை வேந்தர் வேந்தன்
கண்டிரண் முத்த மாலைக்
  கதிர்முலை நங்கை மாரை
வெண்டிரை வியக்குங் கேள்வி
  விசயைகண் ணபயம் வைத்தான்.

   (இ - ள்.) திங்கள் தீ கதிர் சுமந்து - திங்கள் தன் இனிய நிலவைச் சுமந்து; தெண்திரை நீத்தம் நீந்தி - தெளிந்த அலைகளையுடைய கடலை நீந்தி; விண்படர்ந்த அனைய மாலை வெண்குடை வேந்தர் வேந்தன் - வானிலே படர்ந்தாற் போன்ற, மாலை யணிந்த வெண்குடையுடைய மன்னர் மன்னன்; கண் திரள்.