பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1691 

முத்தம் மாலைக் கதிர்முலை நங்கைமாரை - கண்திரண்ட, முத்துமாலை அணிந்த ஒளிரும் முலைகளையுடைய மனைவியரை; வெண்திரை வியக்குங் கேள்வி விசயைகண் அபயம் வைத்தான் - வெள்ளிய அலைகளையுடைய கடல்போலும் நூற்கேள்வியையுடைய விசயையினிடம் புகலாகச் சேர்த்தான்.

   (வி - ம்.) தெண்டிரை நீத்தம் - கடல். கதிர் மாலைக்கும் திங்கள் குடைக்கும் உவமை என்க. வேந்தன் : சீவகன், கண்திரள் முலை; கதிர் முத்தமாலை. முலை என இயைக்க. வெண்டிரை: அன்மொழித் தொகை.

( 393 )
2992 கடிமலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்புங் காமர்
வடிமலர் மலர்ந்த காம வல்லியுந் தம்மைத் தாமே
யுடைமலர் கொய்து போக வுகுத்திடு கின்ற தொத்தார்
படைமலர் நெடுங்க ணல்லார் பாசிழை நீக்கு கின்றார்.

   (இ - ள்.) படைமலர் நெடுங்கண் நல்லார் பாசிழை நீக்குகின்றார் - காமன் படையாகிய மலர்போலும் நீண்ட கண்களையுடைய மகளிர் தாம் அணிந்த பசிய அணிகளை நீக்குகின்றவர்கள்; கடிமலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்பும் - மணமலர் நிறைந்து மலர்ந்த கற்பகக் கொம்பும்; காமர் வடிமலர் மலர்ந்த காமவல்லியும் - விருப்பம் வடிந்த மலர் மலர்ந்த காம வல்லியும்; தம்மைத் தாமே உடைமலர் கொய்து போக உகுத்திடுகின்றது ஒத்தார் - தம்மைத்தாமே தம்முடைய மலர் தம்மிடத்துனின்றும் போகக் கொய்து சிந்துகின்ற தன்மையை ஒத்தார்.

   (வி - ம்.) நிறைந்து - நிறைய. கடிமலர் - சிறந்த மலருமாம். ”தேனிறைந்து அலர்ந்த கொம்பு” என்பர் நச்சினார்க்கினியர். வடிமலர் : வினைத்தொகை. காமவல்லி, கற்பகத்தின்மிசைப் படர்வதொரு பொற் பூங்கொடி. படையாகிய மலர் என்க. அவை காமன் அம்புகள் - இழை - அணிகலன். நீக்குகின்றார் : வினையாலணையும் பெயர்.

( 394 )
2993 தழுமலர்த் தாம நான்று
  சந்தகின் மணந்து விம்முஞ்
செழுமணி நிலத்துச் செம்பொற்
  றிருமுத்த விதான நீழ
லெழுமையும் பெறுக வென்னு
  மெழின்முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலிற் காமன்
  கண்புடைத் திரங்க மாதோ.