பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1692 

   (இ - ள்.) தழும் மலர்த் தாமம் நான்று - பருமையாலே தழுவிக்கொள்ளத்தக்க மாலைகள் தூக்கப் பெற்று; சந்து மணந்து அகில் விம்மும் - சந்தனம் மணந்து அகிற்புகை விம்முகின்ற; செழுமணி நிலத்துச் செம்பொன் திருமுத்த விதானம் நீழல் - வளவிய மணிகள் பதித்த நிலத்திலே, செம்பொன்னாலும் அழகிய முத்தினாலும் ஆகிய மேற்கட்டியின் நிழலிலே (அவரை இருத்தி); காமன் கண்புடைத்து இரங்க - காமன் கண்ணிற்புடைத்துக கொண்டு புலம்பிமாறு; எழுமையும் பெறுக என்னும் எழில்முலை நெற்றி - கணவனை எழுமையினும் அடைக என்னும் அழகிய முலைகளின் முகட்டிலே; கழுமிய துகிலின் சூழ்ந்தார் - மயங்கிய ஆடையினாலே கட்டினார்கள்.

   (வி - ம்.) தழும் - தழுவும்; தழுவப்படும் என்க. முத்தவிதானம் - முத்தாலாய மேற்கட்டி; பந்தர், கணவனை எழுமையும் பெறுக என்னும் முலை என்க. கழுமிய துகில் - இழைதெரியாமல் மயங்கிய துகில். ”கழுமல் - மயக்கம். ”நோக்கும் நுழைகலா நுண்பூண் கலிங்கம்” ஆதலின் 'கழுமிய துகில்' என்றனர்.

( 395 )
2994 நறும்புகை நான நாவிக்
  குழம்பொடு பளிதச் சுண்ண
மறிந்தவ ராய்ந்த மாலை
  யணிந்தபைங் கூந்த லாய்பொ
னிறந்தரு கொம்பு நீலக்
  கதிர்க்கற்றை யுமிழ்வ வேபோற்
செறிந்திருந் துகுத்துச் செம்பொற்
  குணக்கொடி யாயி னாரே.

   (இ - ள்.) நாவி நானக்குழம்பொடு - கத்தூரியினது நானக் குழம்புடன்; நறும்புகை - நல்ல மணந்தரும் புகையும்; பளிதச் சுண்ணம் - கருப்புரங் கலந்த சுண்ணப் பொடியும்; அறிந்தவர் ஆய்ந்த மாலை - புனைவியல் அறிந்தவர் ஆராய்ந்த மாலையும்; அணிந்த பைங்கூந்தல் - புனைந்த பசிய கூந்தலை; பொன் நிறம் தரு கொம்பு - பொன்னிறக் கொம்பு; நீலக் கதிர்க்கற்றை உமிழ்பவே போல் - நீலநிறக் கதிர்த் தொகுதியை உமிழ்வனபோல; செறிந்து இருந்து உகுத்து - (மனம் முதலிய முக்கரணங்களும்) அடங்கியிருந்து சொரிந்து; குணம் செம்பொன் கொடி ஆயினார் - நற்பண்புடைய செம்பொற் கொடி ஆயினார்.

   (வி - ம்.) நாவி நானக்குழம்பு என மாறுக. நாவி - கத்தூரி. பளிதம் - கருப்பூரம், பொன்னிறந்தரு கொம்பு என்றது கற்பகக் கொம்பினை. நீலக் கதிர்க்கற்றை - நீலமணியினது ஒளிக்கற்றை - இது கூந்தலுக்குவவமை. குணச்செம் பொற்கொடி என மாறுக.

( 396 )