| முத்தி இலம்பகம் |
1693 |
|
|
28பெரிய யாத்திரை
|
வேறு
|
| 2995 |
இலம்பெரி தெனவிரந் தவர்கட் கேந்திய | |
| |
கலஞ்சொரி காவலன் கடகக் கையிணை | |
| |
புலம்பிரிந் துயர்ந்தன விரண்டு பொன்னிற | |
| |
வலம்புரி மணிசொரி கின்ற போன்றவே. | |
| |
|
|
(இ - ள்.) பெரிது இலம் என இரந்தவர்கட்கு - யாம் பெரிதும் வறியேம் என்று வேண்டினவர்களுக்கு; புலம்புரிந்து - அறிவு மிக்கு; ஏந்திய கலம் சொரி காவலன் கடகக் கையிணை - உயர்ந்த கலன்களைச் சொரிகின்ற வேந்தனுடைய கடகமணிந்த இரு கைகளும்; உயர்ந்தன இரண்டு பொன்நிற வலம்புரி - உயர்ந்தனவாகிய இரண்டு பொன் நிறமான வலம்புரிகள்; மணி சொரிகின்ற போன்ற - மணிகளைப் பொழிவன போன்றன.
|
|
(வி - ம்.) 'பொன்நிற வலம்புரி' என்பதில் உள்ள 'பொன்' என்ற சொல்லை யெடுத்துப் 'பொன்மணி சொரிகின்ற போன்ற' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 397 ) |
| 2996 |
என்பரிந் தெரிதலைக் கொள்ள வீண்டிய | |
| |
வன்பரிந் திடுகலா வுலக மார்கென | |
| |
மின்சொரி வெண்கலம் வீசும் வண்கைகள் | |
| |
பொன்சொரி தாமரைப் போது போன்றவே. | |
| |
|
|
(இ - ள்.) என்பு அரிந்து - என்பும் உருகுமாறு; அன்பு அரிந்து இடகலா உலகம் ஆர்க என - அன்பற்று இடாத உலகம் நுகர்க என்று; எரிதலைக் கொள்ள ஈண்டிய மின்சொரி வெண்கலம் - எரியுந் தன்மையைக் கொள்ளத் திரண்ட மின்னைச் சொரியும் முத்தணைகளை; வீசும் வண்கைகள் - சொரியும் வளவிய மன்னன் கைகள்; பொன் சொரி தாமரைப்போது போன்ற - பொன்னைப் பொழியும் பதும நிதியைப் போன்றன.
|
|
(வி - ம்.) எரி - நெருப்பும் ஆம். 'வன்கை' எனவும் பாடம். இரப்பவரிடம் அன்பற்று இடாத உலகங்கள் பகைமன்னர் நாடுகளும் வன்பாலாகிய நிலங்களும் ஆம்.
|
( 398 ) |
| 2997 |
பூந்துகில் புனைகல மாலை பூசுசாந் | |
| |
தாய்ந்துல குணவுவந் தருளி மாமணி | |
| |
காந்திய கற்பகக் கான மாயினா | |
| |
னேந்திய மணிமுடி யிறைவ னென்பவே. | |
| |
|