| முத்தி இலம்பகம் |
1694 |
|
|
|
(இ - ள்.) ஏந்திய மணிமுடி இறைவன் - உயர்ந்த மணி முடியை அணிந்த வேந்தன்; பூந்துகில் - அழகிய ஆடையையும்; புனைகலம் - அணிகலனையும்; மாலை - முத்துமாலையையும்; பூசு சாந்து - பூசுகின்ற சந்தனத்தையும்! உலகு ஆய்ந்து உண உவந்து அருளி - உலகம் ஆராய்ந்து நுகர விரும்பிக் கொடுத்து; காந்திய கற்பகக் கானம் ஆயினான் - ஒளிர்கின்ற கற்பகக் கானம் ஆயினான்.
|
|
(வி - ம்.) பானவகை, ஒலிவகை, அணிவகை, மாலைவகை, மணி விளக்குவகை, உணவுச் சாலைவகை, உணவு வகை, ஒளிவகை வேண்டிய கலங்கள், ஆடைவகை எனப் பத்து வகைக் கற்பகங்களும் கொடுப்பன வெல்லாங் கொடுத்தலின் கற்பகக்கானம் என்றார்.
|
( 399 ) |
வேறு
|
| 2998 |
தேய்பிறை யுருவக் கேணித் | |
| |
தேறுநீர் மலர்ந்த தேனா | |
| |
ராய்நிறக் குவளை யஞ்சிக் | |
| |
குறுவிழிக் கொள்ளும் வாட்கண் | |
| |
வேய்நிறை யழித்த மென்றோள் | |
| |
விசயையைத் தொழுது வாழ்த்திச் | |
| |
சேய்நிறச் சிவிகை சோ்ந்தான் | |
| |
றேவர்கொண் டேகி னாரே. | |
|
|
(இ - ள்.) தேய்பிறை - தேய்பிறை யனைய நுதலையும்; உருவம் கேணித் தேறுநீர் மலர்ந்த தேன் ஆர் ஆய்நிற்க் குவளை - அழகிய கேணியிலே தெளிந்த நீரில் மலர்ந்த தேனையுடைய நிறமுறு குவளைமலர்; அஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாட்கண் - அச்சுற்றுக் குவிகின்ற ஒளியுறுங் கண்களையும்; வேய்நிறை அழித்த மென்தோள் - மூங்கிலின் நிறையை அழித்த மெல்லிய தோளையும் உடைய; விசயையைத் தொழுது வாழ்த்தி - விசயையை வணங்கிப் போற்றி; சேய் - முருகனையனைய சீவகன்; நிறச் சிவிகை சேர்ந்தான் - ஒளியுறும் சிவிகையை அடைந்தான்; தேவர் கொண்டு ஏகினார் - வானவர் சுமந்து சென்றனர்.
|
|
(வி - ம்.) 'தேய்பிறை' எனவே நுதலாயிற்று. குறுவிழிக் கொள்ளுதல் இரவில் குவிதல்.
|
|
நச்சினார்க்கினியர், 'வேய்மென் தோள்' எனக் கொண்டு, நிறையழித்த என்பதைத் தனியே பிரித்துச் சச்சந்தன் இறந்தபின் தன்னுறுப்புக்கள் பொலிவுற்றிருத்தல் தகாதெனக் கொண்டு அவற்றின் பொலிவினைக் கடிந்தமை தோன்ற 'நிறையால் அழித்த விசயை' என்றார், என்று விளங்கக் கூறுவர்.
|
( 400 ) |