பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1696 

வேறு

3001 திலக முக்குடைச் செல்வன் றிருநகர்
பலரு மேத்தினர் பாடின ராடினர்
குலவு பல்லியங் கூடிக் குழுமிநின்
றுலக வெள்ள மொலிப்பது போன்றவே.

   (இ - ள்.) திலகம் முங்குடைச் செல்வன் திருநகர் - சிறப்புற்ற முக்குடைச் செல்வனாகிய அருகனுடைய திருக்கோயிலை; பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர் - வானவரும் மக்களுமாகிய எல்லோரும் வாழ்த்தினார், பாடினர், ஆடினர்; குலவு பல்இயம் கூடிக் குழுமி நின்று - விளங்கும் பலவகை இயங்களும் சோந்து கூடி நின்று; உலக வெள்ளம் ஒலிப்பது போன்ற - கடல் கூடி நின்று ஒலிக்கின்ற தன்மையை ஒத்தன.

   (வி - ம்.) முக்குடைச் செல்வன் - அருகன். நகர் ஈண்டுச் சமவ சரணம். பலரும் என்றது தேவரும் மக்களும் என்பதுபட நின்றது.

( 403 )
3002 கானி ரைத்தன காவொடு பூம்பொய்கை
தேனி ரைத்தன செம்பொ னெடுமதின்
மேனி ரைத்தன் வெண்கொடி யக்கொடி
வானு ரிப்பன போன்று மணந்தவே.

   (இ - ள்.) கான் நிரைத்தன காவொடு - மணம் நிரைத்தனவாகிய பொழில்களுடனே; பூம்பொய்கை தேன் நிரைத்தன - மலர்ப் பொய்கைகளினும் வண்டுகள் முரன்றன; செம்பொன் நெடுமதில்மேல் வெண்கொடி நிரைத்தன - செம்பொன் மதிலின் மேல் வெண்கொடிகள் நிரைத்தன; அக் கொடி வான் உரிப்பன போன்று மணந்த - அக்கொடிகள் காற்றால் வானைத் தீண்டி உரிப்பன போன்று கலந்தன.

   (வி - ம்.) கான் - மணம். கா - பொழில். தேன் - வண்டுகள். மணந்த - நெருங்கின.

( 404 )
3003 கோல முற்றிய கோடுயர் தூபையுஞ்
சூல நெற்றிய கோபுரத் தோற்றமு
ஞால முற்றிய பொன்வரை நன்றரோ
கால முற்றுடன் கண்ணுற்ற போன்றவே.

   (இ - ள்.) கோலம் முற்றிய கோடு உயர் தூபையும் - ஒப்பனைகள் நிறைந்த சிகரம் உயர்ந்த தூபியின் தோற்றமும்; சூலம் நெற்றிய கோபுரத் தோற்றமும் - இடிதாங்கிகள் நிறைந்த