பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1697 

கோபுரத்தின் தோற்றமும்; ஞாலம் முற்றிய பொன்வரை - உலகஞ் சூழ்ந்த மேருமலைகள்; காலம் நன்று உற்று உடன் கண்உற்ற போன்ற - தம்மிற் கூடுங்காலம் நன்கு பொருந்திச் சேரக்கூடியவற்றை ஒத்தன.

   (வி - ம்.) பல அண்டங்கள் உலவாதலிற் பல மேருவுளவாம்.

   கோலம் - ஒப்பனை. கோடு - உச்சி. தூபை - தூபி. சமவ சரணத்துள்ள பதினொரு பூமியுள் நவாத்தூபாபூமி என்று ஒன்றுளதாதல் பற்றி ஈண்டுத் தூவி கூறினார். பதினொரு பூமியாவன: - சைத்தியப் பிரசாத பூமி, காதிகாபூமி, வல்லிபூமி, உத்தியானபூமி, துவசபூமி, கற்பகவிருக்க பூமி, நவத்தூபாபூமி, துவாதசகோட்டபூமி, பிரதமபீடம், துவிதீயபீடம், திருதியபீடம் என்பனவாம். சூலம் - உச்சியில் நாட்டப்படுவதொரு சூல வடிவிற்றாகிய உறுப்பு; (இக்காலத்தே நடப்படும் இடி தாங்கியை ஒப்பது.)

( 405 )
3004 வாயிற் றோரணங் கற்பக மாலைதாழ்ந்
தேயிற் றிந்திரன் பொன்னக ரின்புறம்
போயிற் றேயகி லின்புகை போர்த்துராய்
ஞாயிற் றொள்ளொளி நைய நடந்ததே.

   (இ - ள்.) வாயில் தோரணம் - வாயிலில் நட்ட தோரணம்; இந்திரன் பொன்நகர் கற்பக மாலை தாழ்ந்து - இந்திரன் நகரிலுள்ள கற்பக மாலை தம்மேற்றங்க ஆண்டுச் சென்று; ஏயிற்று - பொருந்திற்று; அகிலின் புகை புறம் போயிற்று - அகிலின் புகை அவ்வானவருலகின் புறத்திலே போயிற்று; போர்த்து உராய் ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்தது - அப் புகை பின்னர் அவ்வுலகைப் போர்த்து உராய்ந்து ஞாயிற்றின் சிறந்த ஒளி மழுங்க நடந்தது.

   (வி - ம்.) தாழ்ந்து - தாழ : தோரணம் இந்திரன் பொன்னகரின் கற்பக மாலை தாழ ஏயிற்று என இயைக்க. இது தோரணகம்பத்தின் நெடுமையும் அகிற் புகையின் மிகுதியும் கூறியவாறு. ”தோரணம் கற்பக மாலை தாழ்ந்து அகிலின்புகை பொருந்திற்று” என நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சிறவாமையுணர்க.

( 406 )
3005 செய்ய தாமரைப் பூவினுட் டேங்கமழ்
பொய்யில் சீர்த்திவெண் டாமரை பூத்தபோன்
றையஞ் செய்தடு பானிறப் புள்ளின
மையி றாமரை மத்தகஞ் சோ்ந்தவே.

   (இ - ள்.) செய்ய தாமரைப் பூவினுள் தேங்கமழ் பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று - செந்தாமரை மலரினுள்ளே தேன் மணக்கும் பொய்யற்ற மிகு புகழையுடைய வெண்தாமரை பூத்தன போன்று; ஐயம் செய்து - ஐயமுண்டாக்கி; அடு பால்நிறப் புள்இனம் - காய்ச்சின பாலின் நிற