பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1698 

முடைய அன்னப் பறவைத் தொகுதி; மைஇல் தாமரை மத்தகம் சேர்ந்த - குற்றமற்ற தாமரை மலர்களின் உச்சியை அடைந்தன.

   (வி - ம்.) செய்ய தாமரைப்பூ - செந்தாமரைப்பூ. வெண்ணிறம் அழுக்கற்ற தூய்மைக்கு உவமையாதல் பற்றி, பொய்யில் சீர்த்திவெண்டாமரை என்றார். சீர்த்தி. வெண்மைக்கு அடைமாத்திரையாய் நின்றது. வெண்டாமரைல - அன்னத்திற் குவமை. அடுபால் : வினைத்தொகை. பானிறப்புள் - அன்னம். மத்தகம் - உச்சி.

( 407 )
3006 மல்லன் மாக்கட லன்ன கிடங்கணிந்
தொல்லென் சும்மைய புள்ளொலித் தோங்கிய
செல்வ நீர்த்திருக் கோயிலிம் மண்மிசை
யில்லை யேற்றுறக் கம்மினி தென்பவே.

   (இ - ள்.) மல்லல் மாக்கடல் அன்ன கிடங்கு அணிந்து - வளமிகும் பெரிய கடல் போன்ற அகழி சூழ்ந்து; ஒல் என் சும்மைய புள் ஒலித்து - ஒல்லென ஆரவாரமுள்ள பறவைகள் ஒலித்து; ஓங்கிய செல்வநீர்த் திருக்கோயில் - உயர்ந்த செல்வ முள்ள நீர்மைத்தாகிய திருக்கோயில்; இம் மண்மிசை இல்லையேல் துறக்கம் இனிது என்ப - இத் தரைமிசை இல்லையாயின் துறக்கம் இனிது என்பர்.

   (வி - ம்.) இஃது உளதாதலின் துறக்கம் தீது என்கின்றனர்.

   எனவே. இச் சமவசரணத்தில் உறைவோர் துறக்கமும் வேண்டார் என்றவாறாயிற்று. இக் கருத்து ”(திருப்பரங்) குன்றத்து கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலைமாலை அடியுறை இயைநர் மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்” (17) எனவரும் பரிபாடற் கருத்தோடொக்கும்.

( 408 )

வேறு

3007 விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த்
துளங்கொளி மணிவணன் றொழுது துன்னினான்
வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கட
லிளங்கதிர்ப் பருதியொத் திறைவன் றோன்றினான்.

   (இ - ள்.) மின்னு தார்த் துளங்கு ஒளிமணி வணன் - மின்னும் மாலையணிந்த ஒளியுறும் சீவகன்; விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து - விளங்கும் ஒளியையுடைய வானை ஊடறுத்து இறங்கி; தொழுது துன்னினான் - (கோயிலை நோக்கித்) தொழுதவாறு நெருங்கினான்; வளம்கெழு மணிவரை நெற்றி - வளம் பொருந்திய மாணிக்க மலையின் உச்சியிலே; பால்கடல் இளம் கதிர்ப் பருதி ஒத்து - பாற்கடல் மிசை இளங்கதிரையுடைய