பக்கம் எண் :

பதிகம் 17 

போல மயங்கி; உதிதற்கு உரியாள் பணியால் உடன்ஆய ஆறும் - (உலகு விளங்கத்) தோன்றினவனுக்குரிய தத்தையின் ஏவலால் அவனைக் கண்டபடியும்; நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த ஆறும் - பொருள் தேடவேண்டும் என்னும் வழியாலே அவன் தோழர் அவனைத் தேடினபடியும்; பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த ஆறும் - தன் கணவனைப் பிரிந்து சென்று, தன்னைப்பெற்ற அன்னையாகிய விசயையைச் (சீவகன் கண்டு) வணங்கினபடியும்;

 

   'வயமீன்களெனத் தோழர் நிரந்த படியும்' என்றும் ஆம். பதியினின்றும் நீங்கிப் பிள்ளையைப் பெற்றாளெனவே விசயையாம். பதி; இராசமாபுரமும் ஆம்; ஏமமாபுரமும் ஆம்.

 

   பதி : ஏமமாபுரம் எனக்கொண்டு சீவகன் தன் தோழருடன் ஏமமாபுரத்தை விட்டுச்சென்று அன்னையை வணங்கினான் என்பதே சிறப்புடையது தொடர்ச்சியாக வருவதால். பதி : இராசமாபுரம் என்றும் கணவன் என்றும் பொருள் கொண்டால் அகன்றவள் விசயை ஆவாள். உதிதன் : தோன்றியவன் உரோகிணி என்னும் விண்மீன் திங்களை விட்டு நீங்காமல் இருக்கும். நந்தட்டனும் தோழர்களும் பிரியாமல் இருந்தவர்கள். நந்தட்டன் : கந்துக்கடன் மகன்.

( 18 )
24 கண்வா ளறுக்குங் கமழ்தாரவன் றாயொ டெண்ணி
விண்வா ளறுக்கும் நகர்வீதி புகுந்த வாறு,
மண்மேல் விளக்காய் வரத்திற்பிறந் தாளோர் கன்னிப்
பெண்ணாரமிர்தின் பெருவாரியுட் பட்ட வாறும்,

   (இ - ள்.) கண்வாள் அறுக்கும் கமழ்தாரவன் தாயொடு எண்ணி-கண்ணின் ஒளியைத் தடுக்கும் மணமிகு மாலையான் தன் அன்னையொடும் ஆராய்ந்து; விண் வாள் அறுக்கும் நகர்வீதி புகுந்த ஆறும் - விண்ணிடத்தை வாள்போலப் பிரிக்கும் இராசமாபுரத்தின் தெருவிலே சென்றபடியும்; மண்மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் - மண்ணுலகுக்கு விளக்கென வரத்தினாற் பிறந்தவளாகிய; ஓர் கன்னிப்பெண் ஆர் அமிர்தின் - ஒரு கன்னிப் பெண்ணாகிய சிறந்த அமுதத்தின்; பெருவாரியுள்பட்ட ஆறும் - பெரிய இன்பக்கடலிலே அகப்பட்டபடியும்.

 

   (வி - ம்.) மாலையைக் கண்ட கண் பிறிதொன்றிற் செல்லாமையின் 'கண்வாள் அறுக்கும்' என்றார். விண் - தேவருலகு. மண்மேல் : (மண்ணுக்கு என நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்ததால்) உருபு மயக்கம். 'கன்னிப் பெண்ணாரமிர்தின் பெருவாரி'1 பல சொற்றொகை

 

1. 'கன்னிப் பெண்ணாரமிர்து என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் 'பெருவாரி' என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் கொண்டு இரு சொல் தொகை யென்றார். 'கற்சுனை' ஒரு சொல் போலவும் 'குவளையிதழ்' ஒரு சொல்லாகவும் நின்றன.