நாமகள் இலம்பகம் |
170 |
|
பிறந்தபொழுதே; மருள்உடை மாதர்உற்ற மம்மர் நோய் மறைந்தது - மயக்கம் உற்ற விசயை கொண்ட வருத்தநோய் மறைந்தது.
|
|
(வி - ம்.) ஏந்தி - மிக்கு. இகலி - விளக்கொடு மாறுபட்டு எனினும் ஆம். இவன் வீடு பெறுவன் என்று கருதித் தெய்வம் வணங்கிற்று. 'கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தாங்கு' (நாலடி. 201) என்றார் பிறரும். முன், 'வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான்' (சீவக. 289) என்று கூறி, அச்சுடர் குழவியாய்த் தோன்றிமை [ஈண்டுக்] கூறினார். ஞாயிறு தோற்றத்தில் இருளைப் போக்கிப் பின்னர் மதியத்தைக் கெடுக்குமாறு போல, இவனும் பிறந்தபோதே தேவியின் இருளைப் போக்கிப் பின்பு பகைவெல்வான் என்பது கருத்து. இக்கருத்தாற், 'செய்யோன் செழும் பொற்சரம் (சீவக. 2822) என்றும், 'மதிவீழ்வது போல வீழ்ந்தான்' (சீவக. 2822) என்றும் கூறினார்.
|
|
இச் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கங்கள் மிக்க நுணுக்கமுடையன. அவற்றிற் கியல்பன்மை தோன்ற அருளுடை மனத்தவாகி என்றார். அணங்கு - பேய், பொன்னானன் என்றது பொன் போன்று பெறுதற்குரியவன் என்றவாறு.
|
( 275 ) |
305 |
பூங்கழற் குருசி றந்த |
|
புதல்வனைப் புகன்று நோக்கித் |
|
தேங்கம ழோதி திங்கள் |
|
வெண்கதிர் பொழிவ தேபோல் |
|
வீங்கிள முலைகள் விம்மித் |
|
திறந்துபால் பிலிற்ற வாற்றாள் |
|
வாங்குபு திலகஞ் சோ்த்தித் |
|
திலகனைத் திருந்த வைத்தாள். |
|
(இ - ள்.) தேன்கமழ் ஓதி - தேன் மணக்குங் கூந்தலையுடையாள்; பூங்கழல் குருசில்தந்த புதல்வனைப் புகன்று நோக்கி - அழகிய கழலணிந்த சச்சந்தன் கொடுத்த மகனை விருப்புடன் நோக்கி; வீங்கு இளமுலைகள் விம்மித் திங்கள் வெண்கதிர் பொழிவதேபோல் திறந்து பால்பிலிற்ற ஆற்றாள் - பருத்த இளமுலைகள் தாமே விம்மி நிலவின் வெள்ளிய கதிரைப் பெய்வதுபோல் திறந்து பால்சொரியும்வரை ஆற்றளாய்; வாங்குபு திலகம் சேர்த்தி - தானே பாலை வலியக்கொண்டு திலகமிட்டு; திலகனைத்திருந்த வைத்தாள் - சிறந்த மகனைச் செவ்வையாகக் கிடத்தினாள்.
|
|
(வி - ம்.) புதல்வன் பொருட்டு இவளைப் போக்குதலின், 'குருசில் தந்த புதல்வனை' என்றார். மகப் பயந்தோர்க்குப் பயந்தபொழுதே பால் சுரவாதாகையால், 'ஆற்றாள் வாங்குபு' என்றார்.
|
( 276 ) |