| முத்தி இலம்பகம் |
1701 |
|
|
|
போலத் திரண்ட, நெருங்கிய மலர்களால் ஆகிய மாலை; தாழ்ந்து - தூக்கப்பெற்று; மேல் வழாத்திரு மலரெலாம் மலர்ந்து - மேலே வாடாத அழகிய மலரெலாம் பூத்து; வண்டினம் குழாத்தொடும் இறைகொளக் குனிந்து - வண்டின் திரள் குழுவினொடும் தங்குதல் கொள்கையினாலே சுமை மிக்கு வளைந்து; குயில்கூய் விழாக்கொள விரிந்தது - குயில் கூவும்படியாக விழாக் கொள்ளப்பரவியது.
|
|
(வி - ம்.) முழா - முழவு. வழா - வாடாத. இறைகொள்ளுதலானே என்க. ஏதுவாக்குக. குயில்கூய் என மாறுக; கூய் - கூவ. வீரன் - அருகக் கடவுள். பிண்டி - அசோகமரம்.
|
( 414 ) |
| 3013 |
பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெட | |
| |
விண்டிலர் கனைகதிர் வீரன் றோன்னினா | |
| |
னுண்டிவ ணறவமிர் துண்மி னோவெனக் | |
| |
கொண்டன கோடணை கொற்ற முற்றமே. | |
| |
|
|
(இ - ள்.) பிறவி நோய் கெட - பிறவியாகிய நோய் கெடும்படி; பிண்டியின் கொழுநிழல் - அசோகின் வளவிய நிழலிலே; விண்டு அலர் கனைகதிர் வீரன் தோன்றினான் - விரிந்து மலர்ந்த மிக்க ஒளியை உடைய அருகப் பெருமான் தோன்றினான்; இவண் அற அமிர்து உண்டு - (இனி) இவ்விடத்தே அறமாகிய அமிர்தம் உண்டு; உண்மினோ என - அதனை உண்பீராக என்று, கொற்ற முற்றம் கோடணை கொண்டன - கோயிலின் வெற்றி முற்றங்கள் ஆரவாரத்தைக் கொண்டன.
|
|
(வி - ம்.) கோடணை : அருகனுக்கு வானவர் செய்யும் எண்வகைச் சிறப்புக்களில் ஒன்றாகிய தெய்வத் துவனி.
|
|
பிறவி நோய் : பண்புத்தொகை. உண்டு : குறிப்பு வினைமுற்று. இவண் அறவமிர்தம் உண்டு என மாறுக.
|
( 415 ) |
| 3014 |
வானவர் மலர்மழை சொரிய மன்னிய | |
| |
வூனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன் | |
| |
றேனிமிர் தாமரை திளைக்குஞ் சேவடி | |
| |
கோனமர்ந் தேத்திய குறுகி னானரோ. | |
| |
|
|
(இ - ள்.) வானவர் மலர்மழை சொரிய - அமரர் பூமாரி பெய்ய; மன்னிய ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன் - பொருந்திய ஊனிலே பரவிய பிறவியை மாற்றும் அருகனுடைய; தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி - வண்டுகள் முரன்று தாமரை யென்று பயிலும் சேவடியை; அமர்ந்து ஏத்திய கோன்குறுகினான் - விரும்பிப் போற்றுதற்கு அரசன் அணுகினான்.
|