பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1703 

3017 வேய்களிய வண்டறைய விரிந்தலர்ந்த
  தாமரையின் விரைசோ் போதின்
வாயொளியே பெறநடந்த மலரடியை
  வலங்கொண்டார் வருந்தார் போலும்.

   (இ - ள்.) அறிந்தார் கோவே! - அறிந்தாருடைய அரசே!; காய்களிற்றின் மருப்பினிடைக் கவளம் போன்று ஏமாராக்கதியுள் தோன்றி - காயும் களிற்றின் கொம்பினிடையே கவளம் போலக் (காலன் கைப்பட்டு அவன் நுகர்ந்து) கெடுகின்ற கதிகளிலே பிறந்து; ஆய் களிய வெவ்வினையின் அல்லாப்புற்று அஞ்சினேன் - ஆராய்ந்த களிப்பினையுடைய தீவினையாலே வருத்தம் உற்று (இப் பிறவியை) அஞ்சினேன்; வேய்களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த விரைசேர் தாமரையின் போதின் வாய் - பொருந்திய களிப்பினையுடைய வண்டுகள் முரல விரிந்து மலர்ந்த மணஞ்சேர் தாமரை மலரின் கண்ணே; ஒளிபெற நடந்த மலரடியை - அஃது ஒளியுற நடந்த மலர்போலும் அடியை; வலம் கொண்டார் வருந்தார் - வலம் வந்தவர் வருந்தமாட்டார்.

   (வி - ம்.) போலும் : அசை (ஒப்பில் போலி).

   'இப் பிறவியால் வருந்தாதவர், தாமரையினது போதிடத்தே அது தான் ஒளிபெற நடந்த நின் திருவடிகளை வலம் வந்தார்போலே இருந்தது' என்று பொருள்கூறி, 'ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்' (தொல். இடை. 30) என்றதனாற் பொருள் தந்தே நின்றது என்பர் நச்சினார்க்கினியர்.

( 419 )

வேறு

3018 சேடார்செம்பொற் றிருமணிவைரத்
  தொத்தணிந் துலகோம்பும்
வாடாமாலை வார்தளர்ப்பிண்டி
  வாமநின் குணநாளும்
பாடாதாரைப் பாடாதுலகம்
  பண்ணவர் நின்னடிப்பூச்
சூடாதார்தாள் சூடார்மலைச்
  சுடர்மணி நெடுமுடியே.

   (இ - ள்.) சேடு ஆர் செம்பொன் திருமணி வைரத்தொத்து அணிந்து - பெருமை நிறைந்த பொன்னுடன் அழகிய நீல மணியையும் வைரக் கொத்தினையும் அணிந்து; உலகு ஓம்பும் - உலகைக் காக்கின்ற; வாடாமாலை வார்தளிர்ப் பிண்டி வாம! - வாடாத மாலையும் நீண்ட தளிரையுமுடைய அசோகின் நீழலிலே யிருந்த வாமனே!; நின் குணம் நாளும் பாடாதாரை உலகம்