| முத்தி இலம்பகம் |
1705 |
|
|
| 3020 |
தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழத் | |
| |
துளும்பா திருந்த திங்கள்போன் | |
| |
முழுதும் வைய முடனேத்த | |
| |
முதுவாய் வலவை யாயிருந் | |
| |
தழுது வினைக ளல்லாப்ப | |
| |
வறைந்தோய் நின்சொ லறைந்தார்கள் | |
| |
பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற் | |
| |
பல்லாண் டெல்லாம் பரியாரே. | |
|
|
(இ - ள்.) தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழ - தொகுதலையுடைய பல மீனின் திரள் சூழ; துளும்பாதிருந்த திங்கள்போல் - அசையாதிருந்த திங்களைப் போல; வையம் முழுதும் உடன் ஏத்த - உலகமெல்லாம் ஒருங்கே வாழ்த்த; முதுவாய் வலுவாய் இருந்து - முதிய உண்மையால் வெற்றியுடையை ஆக இருந்து; வினைகள் அழுது அல்லாப்ப அறைந்தோய் - இருவினைகளும் அழுது வருந்த அறத்தைக் கூறியவனே!; நின் சொல் அறைந்தார்கள் - நின் அறத்தைச் சாற்றினவர்கள்; பழுதுஇல் நறுநெய்க் கடற்சுடர் போல் பால்லாண்டெல்லாம் பரியார் - கெடுதியில்லாத நல்ல நெய்க்கடலில் இட்ட விளக்குப்போலே பல்லாண்டுகள் எல்லாம் வருந்தார்.
|
|
(வி - ம்.) தொழுதி - தொகுதி. துளும்புதல் - அசைதல். பன்மீன் - உயிர்த் தொகுதிக்கும் திங்கள் அருகனுக்கும் உவமைகள். முதுவாய் - முதிய உண்மை. வலவை - பெற்றியை உடையை : முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று. வலம் - வெற்றி. அல்லாத்தல் - வருந்துதல். சொல் - ஈண்டு அறத்திற்கு ஆகுபெயர். பல்லாண்டெல்லாம் என்றது எக்காலத்தும் என்பதுபட நின்றது.
|
( 422 ) |
| 3021 |
செழும்பொன் வேய்ந்து மணியழுத்தித் | |
| |
திருவார் வைர நிரைத்ததனுட் | |
| |
கொழுந்து மலருங் கொளக்குயிற்றிக் | |
| |
குலாய சிங்கா தனத்தின்மே | |
| |
லெழுந்த பருதி யிருந்தாற்போ | |
| |
யழுந்தேன் வந்துன் னடியடைந்தே | |
| |
பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற் | |
| |
னருவாய்ப் போத லழகிதோ. | |
|
|
(இ - ள்.) செழும்பொன் வேய்ந்து - வளவியு பொன்னால் வேய்ந்து; மணி அழுத்தி - மணிகளை இழைத்து; திருஆர்வைரம் நிரைந்து - அழகு பொருந்திய வைரத்தை ஒழுங்குறப் பதித்து;
|