பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1706 

அதனுள் கொழுந்தும் மலரும் கொளக் குயிற்றி - அதனுள் கொழுந்தும் மலரும் வடிவுகொள்ளும்படி வல்லியை எழுதி; குலாய சிங்காதனத்தின் மேல் செய்த அரியணையின் மேலே; எழுந்த பருதியிருந்தாற்போல் இருந்த எந்தை பெருமானே!- இளஞாயிறு இருந்தாற்போலே இருந்த எந்தையாகிய பெருமானே!; அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் - பிறவிக்கடலில் அழுந்தேனாய் வந்து நின் அடியைச் சேர்ந்தேன்; அருவாய்ப்போதல் அழகிது - பிறப்பற்றுப் போதல் நன்று.

   (வி - ம்.) திரு - அழகு. குயிற்றி - எழுதி. குலாய - பண்ணின. பருதி - ஞாயிறு. எந்தையாகிய பெருமானே என்க. அருவாய்ப்போதல் - பிறப்பற்றுப் போதல். ஓகாரம் : சிறப்பு; ஈற்றசையுமாம்.

( 423 )

வேறு

3022 குண்டலமும் பொற்றோடும் வைந்தாருங் குளிர் முத்தும்
வண்டலம்பு மாலையு மணித்தொத்து நிலந்திவள
விண்டலர்பூந் தாமரையின் விரைத்தும்ப மேனடந்த
வண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்.

   (இ - ள்.) குண்டலமும் - குண்டலமும்; பொன்தோடும் - பொன்னால் ஆகிய தோடும்; பைந்தாரும் - பசிய மாலையும்; குளிர் முத்தும் - தண்ணிய முத்தும்; வண்டு அலம்பும் மாலையும் - வண்டுகள் முரலும் (முடி)மாலையும்; மணித்தொத்தும் - (அம்முடி மாலையிலே) மணிக்கொத்தும்; நிலம் திவள - நிலத்திலே பொருந்தி அசைய; விண்டு அலர்பூந் தாமரையின் விரைத்தும்பமேல் நடந்த - விரிந்து மலர்ந்த அழகிய தாமரை மலரின் மணம் பொங்க அதன்மேல் நடந்த; வண்டு அலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான் - வண்டுகள் மொக்கும் அழகிய திருவடியை மணி முடியினாலே வணங்கினான்.

   (வி - ம்.) குண்டலம் - காதணியிலொருவகை. அலம்பும் - முரல்கின்ற. தொத்து - கொத்து, திவள - துவள; புரள என்றவாறு. விரை - நறுமணம். தாமரையின் மேனடந்த அடி; வண்டலர் பூந்திருவடி எனத் தனித்தனி கூட்டுக.

( 424 )
3023 நிலவிலகி யுயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோ
யுலகமிருள் கெடவிழிக்கு மொண்மணி யறவாழி
யலகையிலாக் குணக்கடலை யகன்ஞான வரம்பானை
விலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான்.

   (இ - ள்.) நில விலகி - (ஒளியால்) நிலவை விலக்கி; உயிர் ஓம்பி - பல்லுயிரையும் காப்பாற்றி; நிமிர்ந்து ஒளிர்ந்து - மேனோக்கி