பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1707 

விளங்கி; உலகம் பசி பகை நோய் இருள் கெட விழிக்கும் - உலகின்கண் பசியும் பகையும் நோயும் இருளும் நீங்க ஒளிர்கின்ற; ஒண்மணி அற ஆழி - ஒள்ளிய மணியிழைத்த அறவாழியையுடைய; அலகை இலாக் குணக்கடலை - எண்ணிறந்த பண்புக் கடலை; அகல்ஞான வரம்பானை - பரவிய ஞானத்துக்கு எல்லையாந் தன்மையுடையவனை; விலைஇலா மணிமுடியான் - விலைமதிக்க முடியாத மாணிக்க முடியினான்; விண் வியப்ப இறைஞ்சினான் - வானவர் வியப்ப வணங்கினான்.

   (வி - ம்.) நிலாப்போன்று விளங்கி எனினுமாம். உலகம் பசிபகை நோய் இருள்கெட என இயைக்க. உலகம் - உயிர். விழித்தல் - ஒளிர்தல். அலகை - அளவு. மணிமுடியான் என்றது சீவகனை.

( 425 )
3024 தூய்த்திரண் மணித்தாமஞ்
  சொரிந்துபொன் னிலநக்கப்
பூத்திரண் மணிமாலைப்
  போர்ச்சிங்கம் போதகம்போ
லேத்தரிய குணக்கடலை
  யிகலின்ப வரம்பானைத்
தோத்திரத்தாற் றொழுதிறைஞ்சித்
  துறப்பேனென் றெழுந்திருந்தான்.

   (இ - ள்.) ஏத்த அரிய குணக்கடலை இகல் இன்ப வரம்பானை - புகழ்தற்கியலாத குணக்கடலை, வீட்டுக்குரிய இன்பவரம்புடையவனை; பூத்திரள் மணிமாலைப் போர்ச் சிங்கம் - அழகுறத் திரண்ட மணிமாலையையுடைய போர்ச் சிங்கமாகிய சீவகன்; தூய்த்திரள் மணித் தாமம் சொரிந்து பொன்நிலம் நக்க - தூய்தாகத் திரண்ட முத்துமாலை சிந்திய பொன் நிலத்தைப்படிய; போதகம்போல் - யானையைப்போல்; தோத்திரத்தால் துதித்து - தோத்திரங்கூறி வாழ்த்தி; இறைஞ்சி - வணங்கி; துறப்பேன் என்று எழுந்திருந்தான் - இனி, யான் துறவு பூண்பேன் என்று எழுந்தான்.

   (வி - ம்.) இகல் இன்பம் - உலக இன்பங்கட்கு மாறாகிய இன்பம். எனவே வீட்டின்பம் சுதன்மர் என்னும் கணதரரிருக்குமிடத்தே போந்தான்.

( 426 )

வேறு

3025 முடியணி யமரரு முலைநல் லார்களும்
புடைபணிந் திருந்தவப் புலவன் பொன்னகர்
கடிமலர்க் கற்பகங் காம வல்லியோ
டிடைவிரா யெங்கணும் பூத்த தொத்ததே.