பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1708 

   (இ - ள்.) முடி அணி அமரரும் முலை நல்லார்களும் - முடியுடைய வானவரும் அவர் மனைவியரும்; புடைபணிந்து இருந்த அப் புலவன் பொன்நகர் - அருகே வணங்கியிருந்த அவ்வறிவுடையோன் கோயில்; கடிமலர்க் கற்பகம் காமவல்லியோடு - மணமுறும் மலர்களையுடைய கற்பகமும் காமவல்லியும்; எங்கணும் இடைவிராய்ப் பூத்தது ஒத்தது - எங்கும் கலந்து மலர்ந்தது போன்றது.

   (வி - ம்.) முலை நல்லார் - சுண்ணம் அணிந்ததனால் முலை நல்லவர்கள்.

   அமரர்க்குக் கற்பகமும் நல்லார்க்குக் காமவல்லியும் உவமைகள். புடை - பக்கம், புலவன் - ஈண்டு அருகன், விராய் - விரவி.

( 427 )
3026 ஒத்தொளி பெருகிய வுருவப் பொன்னகர்
வித்தகன் வலஞ்செய்து விழுப்பொற் பூமிபோய்
மத்தக மயிரென வளர்த்த கைவினைச்
சித்திரக் காவகஞ் செல்வ னெய்தினான்.

   (இ - ள்.) ஒளி ஒத்துப் பெருகிய உருவப் பொன்நகர் - ஒளிகள் யாவும் ஒத்து மிக்க அழகுறு கோயிலை; வித்தகன் செல்வன் வலம்செய்து - அறிவுடைச் செல்வனாகிய சீவகன் வலம் வந்து; விழுப்பொன் பூமிபோய் - சிறந்த பொன்னிலத்தைக் கடந்து சென்று; மத்தக மயிலென வளர்த்த கைவினைச் சித்திரக் காவகம் எய்தினான் - தலைமயிர்போலப் பேணிவளர்த்த வேலைப்பாடுடைய ஓவியம் போன்ற மலர்ப் பொழிலை அடைந்தான்.

   (வி - ம்.) வித்தகன் பொன்நகர் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். எனவே, அவர் கருத்துப்படி வித்தகன் கணதரன் ஆவான்.

( 428 )
3027 ஏமநீ ருலகமோ ரிம்மிப் பாலென
நாமவே னரபதி நீக்கி நன்கலந்
தூமமார் மாலையுந் துறக்கின் றானரோ
காமனார் கலங்கழிக் கின்ற தொத்ததே.

   (இ - ள்.) நாமவேல் நரபதி - அச்சந்தரும் வேலேந்திய சீவகன்; ஏமம் நீர் உலகம் ஓர் இமமிப் பால் என - கடல்சூழ்ந்த உலகம் (தவத்துடன் ஒப்பிட) ஓர் இம்மியளவே என; நீக்கி - அதனைத் துறந்து; நன்கலம் தூமம்ஆர் மாலையும் துறக்கின்றான் - அழகிய பூண்களையும் நறுமணப் புகையார்ந்த மாலையையும் நீக்குகின்றான்; காமனார் கலம் கழிக்கின்றது ஒத்தது - (அவ்வாறு நீக்குந்தன்மை) காமனார் பூண்களைக் கழிக்கின்ற தன்மையை ஒத்தது.